Alaioli
தமிழ்ப் பள்ளி மாணவர் உதவி நிதியம் நடத்திய வட மண்டல கட்டுரைப் போட்டி .

ஈப்போ, ஆக். 5 -


சுங்கை சிப்புட், ஆக 5


வட மாநிலங்களைச் சேர்ந்த தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்காக உதவி நிதியம் நடத்திய கட்டுரைப் போட்டியில் 

ஈப்போ தேசிய வகை  சென்ட்  பிலோமினா  கான்வெண்ட் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த  வேதாஷினி இராதாகிருஷ்ணன்  வெற்றி பெற்று முதல் பரிசுக்கான 1,000 ரிங்கிட் மற்றும் வெற்றக் கிண்ணத்தையும்  பெற்றார். 


அந்த மாணவியின்  இந்த வெற்றிக்காக  சென்ட்  பிலோமினா  கான்வெண்ட் தமிழ் பள்ளிக்கு  2,500 ரிங்கிட் மதிப்புள்ள  விவேக  தொலைக்காட்சி பெட்டி ஒன்றும்  பரிசாக  வழங்கப்பட்டது.  


இப்போட்டியில் பினாங்கு  இராமகிருஷணா தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த  சார்வினி பரமேஸ்வரன் இரண்டாவது இடத்தைப் பெற்று  700 ரிங்கிட், வெற்றிக் கிண்ணத்தையும் , சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்  ஸ்ரீகௌசல்யா மூன்றாவது பரிசுக்கான  500 ரிங்கிட் மற்றும் கிண்ணத்தையும் பெற்றார்.    


அதோடு  பேரா, பினாங்கு மற்றும் கெடா ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த  மாணவர்கள்  கலந்துகொண்ட இந்த கட்டுரைப் போட்டின்   இறுதிச் சுற்றில்  பினாங்கு, பேரா  ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த எட்டு  தமிழ்ப்  பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.  


சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில், போட்டியில்   பங்கேற்ற  மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.  


மேலும்  பினாங்கு  ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த  அஞ்சனா தீபன் ராஜ் ,  புண்டுட் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த  சுந்தரவேல் கணேசன்,  சென்ட் பிலோமினா  கான்வெண்ட்  தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த  சைந்தவி கோவலன்,  பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த   லாவண்யா மற்றும் சுங்கை சிப்புட்   மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த   சாஸ்வினி  ரவிகுமார் ஆகியோர்  ஆறுதல் பரிசாக  100 ரிங்கிட்டையும், கிண்ணத்தையும்    பெற்றனர்.  


 இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும்  பதக்கங்கள், சான்றிதழ் மற்றும்   100 ரிங்கிட் போக்குவரத்து கட்டணமாக 100 ரிங்கிட்டும் வழங்கப்பட்டது.  


இந்த நிகழ்ச்சியின் பரிசளிப்பு விழாவில்  பேரா  மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான   அ. சிவநேசன் கலந்துகொண்டு உரையாற்றினார்.  பல தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் பற்றாக்குறை  மிகவும் மோசமாக இருக்கும் உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிருப்பதாகவும்  தோட்டப்புறங்களில் இருந்து தோட்ட தொழிலாளர்கள் வெளியேறிவிட்டது மற்றும்  இந்தியர்களின்  பிறப்பு விகிதம் குறைந்ததும் இதற்கு காரணங்கள் என  சிவநேசன் தெரிவித்தார். 


இது ஒரு பிரச்னையாக இருந்தாலும்   மாணவர்கள் குறைவாக இருக்கின்ற  பள்ளிகளில்  மாணவர்களை அதிகரிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் உட்பட பல தரப்பினர் தீவிர முயற்சியை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும்  சிவநேசன்  வலியுறுத்தினார்.   


மாணவர்களிடையே  கட்டுரைப் போட்டியை நடத்தி அவர்களிடையே ஊக்கத்தை ஏற்படுத்திய தமிழ்ப் பள்ளி  நிதியத்தின்  சேவையையும் அவர் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில்  நிதியத்தின் தலைவர் வே.விவேகானந்தன்,   மகாத்மா காந்தி கலாசலை தமிழ்ப் பள்ளியின்  தலைமையாசிரியை விஜயலட்சுமி , தமிழ்ப்பள்ளி  நிதியத்தின்  அறவாரிய  தலைவர்  விவேகானந்தன்,  ஆகியோரும் உரையாற்றினர்.


 மேலும்   அறவாரியத்தின்   அறங்காவலர்   பரமசிவம், ரகுநாதன், அம்பலவாணன், அதன் செயலாளர் கே.பந்மநாபன், ஆகியோரும்  கலந்து கொண்டனர்.

Leave a Comment
Trending News