Alaioli
பினாங்கில் ஆன்மிக சத்குரு மகாதேவா தயாரிப்பில் 'ஆழ்மன அற்புதங்கள்' செயலி அறிமுக விழா

உலகப் புகழ்பெற்ற  ஆன்மிகத் தலைவரான சத்குரு மகாதேவா தயாரிப்பில் \'ஆழ்மன அற்புதங்கள்\' ( Miracle of Mind ) என்ற ஏழு நிமிட செயலி தியான உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இவ்வாண்டு கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மைய ஆசிரமத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி நாளில் ஏழு நிமிடங்களுக்கான தியான முறை செயலியை அவர் அறிமுகப்படுத்தினார்.இந்த அறிமுக விழா பினாங்கு சுல்பஃஎஸ் ஹாவுசில் சிறப்பாக வெளியிடு கண்டது


இந்த தியான முறை மிகவும் சக்தி உள்ளதாக,  வல்லமை மிக்கதாக உள்ளது உலகில் பல கோடி மக்கள் மன நல நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மன நலம் பெற்று ஆரோக்கியமுடன் வாழ இந்த தியான முறை பெரிதும் உதவும்.


மன நல நெருக்கடிக்கு தீர்வு காண்பதிலும் ஆலோசனை தருவதிலும் உலகில் ஏராளமான சுகாதார வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.  சத்குரு உருவாக்கிய தியான முறை செயலி மனநல நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிதும் உதவும் என கூறுகிறார்கள்.  ஏழு நிமிடங்களுக்கான மனநல ஆரோக்கிய தியான முறை செயலி இயக்கத்தை நம் நாட்டிலும் அறிமுகப்படுத்துகிறோம் என நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜேரட் கூறினார். 


அண்மையில் மலேசிய ஈசா அறவாரியம் ஏற்பாட்டில்,  பினாங்கில் இருநூறு ஆண்டுகள் புகழ்பெற்ற சப்போக் எஸ்டேட் மாளிகையில் நடைபெற்ற \'ஆழ்மன அற்புதங்கள்\' என்ற \'செயலி\' (App) அறிமுகத்தில்  அழைக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டு 7 நிமிட தியான முறையை அனுபவித்தனர்.


ஏழு நிமிடங்களுக்கான தியான வழிகாட்டியை நமது வாழ்வில் தொடர்ந்து பயன்படுத்தி  வர ஆழ்மன அற்புதங்கள் செயலி துணை செய்கிறது.இது நமது அனுதின வாழ்வில் மாபெரும் மாற்றத்தை கொண்டு வரும். குறிப்பாக மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், மனநல நெருக்கடிக்கு உள்ளானவர்கள் அதிலிருந்து திரும்பி நல்வாழ்வு பெற பெரிதும் உதவும். செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் இந்த செயலி இலவசமாக தரப்படுகிறது. இதனால் உலகளாவிய அளவில் தனிப்பட்டவர்கள் தங்கள் சொந்த மொழியில் இந்த செயலியைக் கேட்க  முடியும். 


மனநலம்  பாதிக்கப்பட்டவர்கள் தனிப்பட்ட முறையில் இந்த செயலியைப் பயன்படுத்தி ஏழு நிமிடங்களுக்கு தியானம் செய்வதால், மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் எதையும் சீர்தூக்கி பார்க்கும் சிந்தனை ஆற்றலையும் உடல் நலத்தையும் பெறுகிறார்கள்.


இன்று நம் நாட்டில் இளைஞர்கள், முதியவர்கள், ஏன் சிறுவர்கள் கூட மனநல நோய் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்கள். உலக அளவிலும் மக்கள் தொகையில்  97 கோடி மக்கள் மனநல நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.


நிகழ்சசியில் நடைபெறும் இந்த சிறிய தியான பயிற்சி வழியாக உலகாார்ந்த அளவில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நெருக்கடி சவால்களை மேற்கொள்ள  ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். பழங்கால பாரம்பரிய  தியான முறையை உளவியல், விஞ்ஞான, தொழில்நுட்ப முறையில் நெறிப்படுத்தி ஆழ் மன அற்புதங்கள் என்ற தலைப்பில் செயலியை தருகிறோம். சமூக ஊடகங்களில் நாளொன்றுக்கு பல மணி நேரங்களை செலவு செய்யும் நாம் இம்முறையை கையாள ஏழு நிமிடங்கள் ஒதுக்கினால் போதுமானது. 


\'ஆழ்மனதின் அற்புதங்கள்\' என்ற செயலி நம்பிக்கையின் கலங்கரை விளக்காக உள்ளது. இம்முறை தனிப்பட்டவர்களின் ஆழ்மனதைத் திறந்து தங்களின் முழு ஆற்றலை அறிய உதவுவதோடு, மனநல நெருக்கடியை மேம்படுத்தி வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக செயல்படத்  தூண்டுதல் தருகிறது. 


ஆழ்மன அற்புதங்கள் (Miracle of Mind) என்ற செயலியை கைத்தொலைபேசியில்,  ப்ளே ஸ்டோர் (play store ) வழி இலவசமாக பதிவு செய்து கொண்டு கேட்க முடியும். (Miracle of Mind by Satguru.) பதவிட்டு காணலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Comment
Trending News