Alaioli
சுக்மாவில் சிலம்பம் - விளையாட்டாளர்களின் கனவுகளை சிதைக்காதீர்

கோலாலம்பூர்,ஆக07: தமிழர் பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பம் அடுத்தாண்டு சிலாங்கூரில் நடைபெறும் சுக்மாவில் இடம் பெறாது என்னும் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விளையாட்டுத்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு சிலம்ப மன்றங்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதோடு கனவுகளோடு காத்திருந்த விளையாட்டாளர்கள் தங்களின் கனவுகள் சிதைந்துவிடுமோ என அஞ்சுகின்றனர்.


அடுத்தாண்டு சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் இடம் பெறாது என்னும் அறிவிப்பை மறுபரிசீலனை செய்யுமாறு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறார்கள்.


தமிழர்களின் மேன்மையான பாரம்பரிய விளையாட்டிற்கு சுக்மாவில் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையை சிலம்ப மன்றங்களோடு சமூக ஆர்வலர்களுன் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து முன் வைத்தும் வருகிறார்கள்.


செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணராஜ் அவர்களும் இவ்விவகாரத்தில் அவரசம் காட்டாமல் மறுபரிசீலனை செய்யுமாறு விளையாட்டு அமைச்சையும் அரசாங்கத்தையும் கேட்டு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment
Trending News