Alaioli
சுக்மாவில் சிலம்பம் இடம் பெற அமைச்சரவையில் பேசுவேன் - கோபிந் சிங் டியோ!!

கோலாலம்பூர்,ஆக08: சிலாங்கூரில் 2026இல் நடைபெறவிருக்கும் சுக்மாவில் சிலம்பம் இடம் பெறுவது குறித்து இன்று நடைபெறும் அமைச்சரவையில் பேசுவேன் என இலக்கவியல் அமைச்சர் மாண்புமிகு கோபிந் சிங் டியோ தெரிவித்தார்.


இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் சிலாங்கூர் சுக்மாவில் இடம் பெறாது என்னும் தகவல் பெரும் பேசும் பொருளாய் உருவெடுத்துள்ளது.


இந்த விவாதம் தொடரக்கூடாது.இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டு சுக்மாவில் இடம் பெற வேண்டும் எனும் தனது நிலைப்பாட்டை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்றும் கூறினார்.


மேலும்,இவ்விவகாரம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ மற்றும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரியின் கவனத்திற்கும் கொண்டு செல்வேன் என்றார்.


நிலவும் இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வுகாணப்படும் என்றும் அவர் தனது நம்பிகையினை வெளிப்படுத்தினார்.

Leave a Comment
Trending News