Alaioli
சிவநேசன் சுழல்கிண்ணம் கால்பந்து - வெ.50 மானியம்!!

ஈப்போ,ஆக08: பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் சுழல் கிண்ணம் கால்பந்து போட்டியில் மாநிலம் முழுவதுமிருந்து சுமார் 61 குழுக்கள் பங்கேற்றனர்.


பேரா மாநில இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசாங்கம் மற்றும் மனிதவளம்,சுகாதாரம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசனின் ஆதரவோடும் நனிச் சிறப்பாக நடந்து வரும் வேளையில் ஆண்கள்,பெண்கள் என இரு பிரிவுகளாகப் இப்போட்டி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.


தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே கால்பந்து ஆர்வத்தை அதிகரிப்பதோடு மட்டுமின்றி வருங்காலத்தில் கால்பந்து துறையில் நம்மவர்கள் நட்சத்திரங்களாய் ஜொலிக்கவும் டத்தோ அமாலுடின் தலைமையில் மேற்கொள்ளும் இந்த அரும்பணியை பாராட்டி மாநில அரசின் சார்பில் வெ.50 வழங்குவதாக சிவநேசன் தெரிவித்தார்.


மேலும்,கடந்தாண்டும் வெ.50 வழங்கியத்கையும் சுட்டிக்கான்பித்த சிவநேசன் கடந்தக்காலங்களில் கால்பந்து துறையில் பேரா மாநிலத்தில் அதிகமான இந்திய விளையாட்டாளர்கள் இருந்தனர்,அந்நிலை மீண்டும் திரும்ப இம்மாதிரியான போட்டிகள் மூலதனமாக திகழ்வதாகவும்  நினைவுறுத்தினார்.


திறன் மிக்க இளம் விளையாட்டாளர்களை அடையாளம் காணும் வாய்ப்பு அதிகமாய் இருக்கும் இம்மாதிரியான கால்பந்து போட்டியில் மாநிலத்திலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் கலந்து கொள்ள ஆவணம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்திய சிவநேசன் எல்லா பள்ளிகளிலும் கால்பந்து பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.


மிகவும் சிறப்பாக நடந்தேறிய இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் ஈப்போ செட்டியார் தமிழ்ப்பள்ளியும் பெண்கள் பிரிவில் ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளியும் வாகை சூடின.


அதேவேளையில்,ஆண்கள் பிரிவில் இரண்டாம் நிலையில் தைப்பிங் சின் வா தமிழ்ப்பள்ளியும் மூன்றாம் நிலையில் தெலுக் இந்தான் பத்தாங் ராஃபிட் தமிழ்ப்பள்ளியும் வெற்றி பெற்றன.


பெண்கள் பிரிவில் இரண்டாம் நிலையில் ஆயர்தாவார் தமிழ்ப்பள்ளி வெற்றி பெற்றது.


முன்னதாக போட்டி தொடங்குவதற்கு முன்னர் உரையாற்றிய டத்தோ அமாலுடின் இப்போட்டி தொடர்ந்து 17வது ஆண்டாக நடைபெறுவதாகவும் இம்முறை ஆண்கள் பிரிவில் 38 குழுக்களும் பெண்கள் பிரிவில் 23 குழுக்களும் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.


மேலும்,இப்போட்டி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிடும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன்,சட்டத்துறை துணை அமைச்சர் எம்.குலசேகரன் உட்பட அனைத்து தரப்பிற்கும் நன்றி தெரிவித்தார்.


போட்டியில் கலந்து வெற்றி பெற்ற குழுக்களுக்கு மாண்புமிகு எம்.குலசேகரன் பரிசுகளை எடுத்து வழங்கினார்.

Leave a Comment
Trending News