Alaioli
மனித வள அமைச்சின் மிசி 2.0 ஏற்பாட்டில் தொழிற்திறன் பயிற்சிப் பட்டறை. 25 இந்திய இளையோர்கள் பயன் பெற்றனர்.

மலேசிய இந்தியர்களின் திறன் மேம்பாட்டுத் துறையான MISI 2.0 (Unit Pembangunan Kemahiran India Malaysia), மனித வள அமைச்சின் கீழ் செயல்படுபவையாக, தொழிற்சாலைக்கான திறன் நிர்ணய பயிற்சிப் பட்டறையை செபராங் ஜெயா அருள்மிகு கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடத்தியது.


இந்நிகழ்ச்சியை பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச் சூழல் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜூ சோமு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து, நான்கு நாள் பயிற்சியில் பங்கேற்ற 25 இந்திய இளைஞர், யுவதிகளுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.


இந்நிகழ்வில் உரையாற்றிய அவர், “மனித வள அமைச்சின் மூலமாக நாடு முழுவதும் நடைபெறும் தொழிற்திறன் பயிற்சிகள், இந்திய இளைஞர்களுக்குச் சிறு தொழில் முனைவர்களாக உருவாகவும், தொழிற்சாலைகளில் பணியிட வாய்ப்புகளைப் பெறவும் உதவுகின்றன,” என்றார்.


மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மின் சிறப்பு அதிகாரி டிக்கம் லூர்ட்ஸ் இதனைத் தெரிவித்தார்., “மதானி அரசாங்கம் தலைமையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் இந்திய இளைஞர்களுக்காக மிகுந்த அக்கறையுடன் தொழிற்திறன் பயிற்சிகள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளார். இளம் தலைமுறையினர் மிசி 2.0  இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ளலாம்,” என உறுதியுடன் தெரிவித்தார்.


இந்த பயிற்சிப் பட்டறையை என்கேஎன் எக்கடமி நிர்வாக இயக்குநரும் ஒருங்கிணைப்பாளருமான கலையரசன் நடராஜன் அவர்கள் திறம்பட வழி நடத்தினார்.


இந்நிகழ்ச்சியில் சிறப்புப் பிரமுகர்களாக:புக்கிட் மெர்தாஜம் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்தீவன் சிமின் சிறப்பு அதிகாரி யோகன்ராஜ்,செபராங் பிறை மாநகர மன்ற உறுப்பினர் பொண்ணுதுரை,டத்தோ பாலன் நம்பியார்,அருள்மிகு கருமாரியம்மன் ஆலய தலைவர் அமரேசன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


இந்தப் பயிற்சி, இளைஞர்களின் தொழில்முனைவு கனவுகளை நனவாக்கும் ஓர் அரிய வாய்ப்பாகத் திகழ்ந்ததுடன் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற்றால் சமூகத்தின் முழுமையான வளர்ச்சி சாத்தியமாகும்!

Leave a Comment
Trending News