Alaioli
கமாசான் தோட்ட துர்கையம்மன் ஆலய மண்டலாபிஷேகம் நிறைவு விழா

கோலா சிலாங்கூர் நகரில் இருந்து பெஸ்தாரி ஜெயா நோக்கிச் செல்லும் பிரதான சாலை நான்காவது மையில் கமாசான் தோட்டத்தில் எழுந்தருளியுள்ள நூறாண்டுகள் பழமையான அருள்மிகு துர்கையம்மன் ஆலயத்தில் மண்டலாபிஷேக சம்பூர்த்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


கடந்த சனிக்கிழமை காலையில் ஆலயத்தில் சிறப்பு பூஜையைத் தொடர்ந்து அருகில் இருக்கும் அருள்மிகு ஶ்ரீ முணியாண்டி ஆலயத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் பால் குடங்கள் ஏந்தி வந்து பாலாபிஷேகத்தில் கலந்து கொண்டு நேர்த்திக் கடனை நிறைவேற்றியதாக ஆலயத் தலைவர் திரு. நா. குருசாமி தெரிவித்தார். நண்பகலில் நடைபெற்ற மகேஸ்வர பூஜைக்குப் பிறகு அன்னாதானம் வழங்கப்பட்டதாக ஆலய துணை தலைவர் திரு. கணேசன் ஆண்டியப்பன் கூறினார்.


அன்றைய தினம் மாலையில் அம்பிகை அலங்கார ரதத்தில் தாமான் கமாசான் தோட்டம் வரை பவனி வந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Leave a Comment
Trending News