Alaioli
பிரதமர் அன்வார் இப்ராஹிம், கம்போங் பாரு ரமலான்  சந்தையைப் பார்வையிட்டார்.

எஸ்.எஸ்.மணிமாறன்.

கோலாலம்பூர். பிப்.25.  இங்கு, கம்போங் பாரு ரமலான் சந்தை நிலவரம் நடவடிக்கைளை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரில் சென்று பார்வையிட்டார். சிலரது புகார்களைப் பெற்றதனால், ரமலான் சந்தையில் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்போர்கள் நோன்புத் துறக்க தத்தம் வீடுகளுக்கு வாங்கிச் செல்லும் உணவுகளில் தூய்மை, புதியவை, போன்ற அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதால், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ, சுகாதார இலாகா அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலக அதிகாரிகளுடன் தாம் ஒரு நேரடிச் சோதனையில் களத்தில் இறங்கியதாக பின்னர் பிரதமர் அன்வார், செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.


ரமலான் மாதத்தில் 30 தினங்கள் நோன்பு நோற்கும் முஸ்லிம் அன்பர்கள், நோன்பு துறக்கும் வேளையில் கெடுதலான உணவுகளை உண்டு பின்னர் அவதிபடக் கூடும் என்பதால் சுகாதார இலாகா அதிகாரிகள் மற்றும் அமலாக்கப் பிரிவினர் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று தாம் பெரிதும் நம்பிக்கை வைத்திருப்பதாக அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியின் போது  ரமலான் சந்தை வளாகத்தில் செயல்படும் நூற்றுக்கும் மேற்பட்ட கடை வியாபாரிகளிடம் பிரதமர் அன்வார் நேரில் சென்று நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்

.


Post ImagePost Image

Leave a Comment
Trending News