Alaioli
ஆகஸ்ட் மாதத்தில் சிலாங்கூரில் நடக்கும் சுக்மா 22 விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளில் செய்தியாளர்களின் பங்களிப்பு; முகமட் ஃபாரிட் தகவல்.

எஸ்.எஸ்.மணிமாறன்.

ஷா ஆலம். பிப்.25. வரவிருக்கும் ஆகஸ்ட் மாதத்தில், சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் ஏற்று நடத்தவிருக்கும் சுக்மா 22 விளையாட்டுப் போட்டி களின் போது, அவற்றைச் சேகரிக்கவும் தகவல்களை வெளியிடவும் வேண்டி, செய்தியாளர்கள் கலந்து கொள்ள அதற்கான ஒரு முன்னேற்பாடு அறிமுக நிகழ்ச்சி  இன்று காலையில் இங்கு நடைபெற்றது. மெடியா சிலாங்கூர் செய்தி நிறுவன சிறப்பு தலைமை அதிகாரி முகமட் ஃபாரிட் முகமட் அஸாரி, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செய்தியாளர்களுக்கு இது குறித்து தெளிவாக விளக்கம் அளித்தார்.


வரும் ஆகஸ்ட் 2026 இல் நடை பெற விருக்கும் சுக்மா 22 விளையாட்டுப் போட்டிகள் மாநில அளவில் பல மாவட்டங்களில் நடத்தப்படவிருக்கும் திட்டத்தைப் பற்றியும் அவர் கூறினார். இதற்கான ஒரு சிறப்புக்குழுவும் தமது மேற்பார்வையில் செயல்பட விருப்பதாக பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முகமட் ஃபாரிட் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.


மாநில அளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன இடங்களில், சுக்மா 22 விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் கால கட்டத்தில் செய்தி நிறுவனங்களின் செய்தியாளர்கள் பங்கேற்று நடப்பு நிலவரங்களைப்பற்றிய செய்திகளை வெளியிடுவர் என்று முகமட் ஃபாரிட் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு நிகழ்ச்சியில், தமிழ், சீன, மலாய், ஆங்கில செய்தி நிறுவனங்களின் செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News