Alaioli
தாமான் ஜெயா உத்தாமா நோன்பு துறப்பு உபசரிப்பில் எலிசா சாம்சன் இமானுவேல் பங்கேற்பு.

எஸ்.எஸ்.மணிமாறன்

பந்திங் மார்ச் 7.  தெலுக் பங்லீமா காராங் தொகுதி ஷோன் மக்கள் பிரதிநிதியாகக் கண்காணிப்பு அதிகாரியாக மேற்கொண்டு வரும் கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் எலிசா சாம்சன் இமானுவேல், தாமான் ஜெயா உத்தாமா சூராவ் அட் தாவ்வா தொழுகை மட நிர்வாகத்தினர் அழைப்பின் பேரில், நேற்றிரவு இங்கு நடைபெற்ற நோன்பு துறப்பு உபசரிப்பில் தாம் பங்கேற்று அனைவருக்கும் ஹரிராயா நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டதாக அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


மத நல்லிணக்கம் சகோதரத்துவம் சமத்துவம் ஒருமைப்பாடு என்ற மனித நேய மாண்புகளுடன் நாம் அனைவரும் இந்த நாட்டில் ஒற்றுமை உணர்வோடு எந்த வித நோக்கமும் இல்லாமல் பயணிக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து உபசரிப்பில் உரையாற்றிய அவர் மேற்கொண்ட கருத்தை வலியுறுத்தினார்.


விரைவில் வரவிருக்கும் ஹரிராயா நோன்புப் பெருநாள் காலங்களில் அனைவரும் திறந்த இல்ல உபசரிப்பு களில் பங்கேற்று அன்பை பலப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று சாம்சன் அலை ஒளியிடம் கூறினார். தாமான் ஜெயா உத்தாமா குடியிருப்பாளர்கள், மோரிப் சட்ட மன்றத்தின் முன்னாள் உறுப்பினர் துவான் ஹாஜி ஹஸ்னுல் பகாருடின், சிஜங்காங் சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலக அதிகாரி டத்தோ சுரிஹான் யூசோப், தாமான் ஜெயா உத்தாமா சூராவ் கண்காணிப்பு அதிகாரி துவான் கைருலஸ்மான் மாட் பியா மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News