Alaioli
400 பேருக்கு உதவி வழங்கிய ஜொகூர் இந்திய முஸ்லிம் தொழில்முனைவோர் சங்கம்

கோகி கருணாநிதி

ஜொகூர் பாரு, மார்.7-ஜொகூர் பாரு: ஜொகூர் மாநில இந்திய முஸ்லிம் தொழில்முனைவோர் சங்கம் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் சமூக நலத்திட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நோன்பு ரமலான் மாதத்தை முன்னிட்டு அனாதை குழந்தைகள், ஏழை குடும்பங்கள் மற்றும் முவாலாப் சமூகத்தினருக்கு உதவி வழங்கி வருகிறது. அந்த வகையில், இவ்வாண்டுக்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


இந்த நலத்திட்ட நிகழ்ச்சி மார்ச் 4 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஜொகூர் பாருவில் உள்ள தாமான் தேசா செமர்லாங் மண்டபத்தில் நடைபெற்றது.இந்த ஆண்டு மொத்தம் 400 பேருக்கு உதவி வழங்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ரொக்கமாக ரி.ம150 வழங்கப்பட்டதுடன், அரிசி வழங்கப்பட்டன. ஒருவருக்கான மொத்த உதவியின் மதிப்பு ரி.ம180 ஆகும்.


இந்த அமைப்பு கடந்த 22 ஆண்டுகளாக ஜொகூர் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்த நலத்திட்டத்தை நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு மாவட்டங்களைத் தேர்வு செய்து அங்கு வாழும் தேவையுள்ள குடும்பங்களுக்கு உதவி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி ஜொகூர் பாரு மாவட்டத்தில் நடைபெற்றது.


இந்த உதவித் திட்டம் பண்டிகை காலத்தில் ஏழை குடும்பங்களின் சுமையை குறைக்க உதவுகிறது என்று இச்சங்கத் தலைவர் ஹாஜி நசார் கான் அப்துல் கடிம் தெரிவித்தார். நமக்கு கிடைக்கும் வாழ்வாதாரத்தையும் நற்செயல்களையும் குறைந்த வாய்ப்புள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார்.


மேலும், அதிகமான மக்களுக்கு உதவி கிடைக்கச் செய்யும் நோக்கத்தில் அடுத்த ஆண்டு முதல் இந்த நலத்திட்டத்தை ஆண்டுக்கு இரண்டு மாவட்டங்களில் நடத்த அமைப்பு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் ஜொகூர் மாநிலத்தில் இன்னும் அதிகமான ஏழை மற்றும் தேவையுள்ள குடும்பங்களுக்கு உதவி வழங்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News