Alaioli
டிஜிட்டல் உலகில் தடம் பதிக்கும் கப்பளா பத்தாஸ் தமிழ்ப்பள்ளி - நவீன 'ஊடகப் படைப்பு மையம்' திறப்பு!

அகல்யா

​கப்பளா பத்தாஸ், மார்ச் 7 –நவீனத் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறையில் மாணவர்களை வருங்கால வெற்றியாளர்களாக உருவாக்கும் நோக்கில், பினாங்கு, கப்பளா பத்தாஸ் பழனியாண்டி தமிழ்ப்பள்ளியில் அதிநவீன ‘ஊடகப் படைப்பு மையம்’ (Studio Hub) அண்மையில் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.


இந்த ​திறப்பு விழா சிறப்பம்சங்களில் பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும், தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புச் செயற்குழுத் தலைவருமான டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு சோமு அவர்களின் பிரதிநிதியாக வருகை தந்த திரு. ஜோதி இளம்பெறு வழுதி, நாடா வெட்டி இந்த மையத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.


இவருடன் சிறப்பு விருந்தினராகக் கண் மருத்துவ நிபுணர் டாக்டர் மனோகரன் சண்முகம் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.​கூட்டு முயற்சியின் வெற்றியாக திகழ்ந்த நிகழ்ச்சி,​இந்த நவீன மாற்றத்தின் பின்னணியில் இரு முக்கிய ஆளுமைகள் தூண்களாக நின்றுள்ளனர்.தலைமையாசிரியர் திரு. செல்வகுமாரன் முனியாண்டி, மாணவர்களின் கல்வி கற்கும் முறையை அடுத்த கட்டத்திற்குத் தள்ளும் நோக்கில் இத்திட்டத்தை வடிவமைத்தார்.


​திரு. பாலகிருஷ்ணன் (வாரியக் குழுத் தலைவர்): இத்திட்டம் செயல் வடிவம் பெற பெரும் உறுதுணையாகச் செயல்பட்டார்.​மாணவர்களுக்குக் கிடைக்கும் புதிய வாய்ப்புகள்,​வெறும் புத்தகக் கல்வியோடு நின்றுவிடாமல், மாணவர்கள் நேரடி அனுபவங்களைப் பெறும் வகையில் இந்த மையம் பின்வரும் வசதிகளை வழங்குகிறது.


​செய்தி வாசிப்புப் பயிற்சி, மேடைப் பயத்தைப் போக்கி சரளமான பேச்சாற்றலை வளர்த்தல்.காணொளி தயாரிப்பு, படத்தொகுப்பு மற்றும் படைப்பாற்றல் திறன்களை மேம்படுத்துதல்.​நேர்காணல் கலை, தகவல் தொடர்பு மற்றும் கேள்வி கேட்கும் திறனை ஊக்கப்படுத்துதல்.​"இன்றைய டிஜிட்டல் உலகில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மற்றவர்களுக்கு இணையாகப் போட்டியிட இத்தகைய தொழில்நுட்ப மையங்கள் ஒரு மைல்கல்லாகும் என நிகழ்வின் போது பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

பள்ளியின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள இந்த 'ஸ்டுடியோ ஹப், வருங்கால ஊடகவியலாளர்களையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் உருவாக்கும் ஒரு தளமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News