Alaioli
தானியங்கி கழிவு சேகரிப்பு மற்றும் சுழல் கழிவுத் தொட்டி செயல்பாடுகள் குறித்து பினாங்கு மாநகராட்சியினர் தொழில்நுட்பக் கண்ணோட்டம்!

பினாங்கு மார்ச் 9 பினாங்கில் தானியங்கி கழிவு  சேகரிப்பு அமைப்பு மற்றும்  சுழல் கழிவுத் தொட்டியின்  நவீனமய செயல்பாடுகள் குறித்த, தொழில் நுட்பங்களை நேரில் பார்வையிடும் பொருட்டு, அண்மையில் அத்துறை தொடர்பான, மாநில மாநகர் மன்றத் தரப்பினரும், மாநகராட்சி உறுப்பினர்களும் இங்கிருக்கும் அவற்றின் மையங்களுக்கு நேரடி வருகையளித்து பார்வையிட்டனர்.


நகர்ப்புறங்களில் திடக்கழிவு மேலாண்மையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக தானியங்கி கழிவு சேகரிப்பு அமைப்பினை விரிவாக செயல்படுத்தும் முயற்சியிலும் சுழல் கழிவுத் தொட்டியின் பயன்பாட்டை மதிப்பாய்வு செய்யும் நோக்கத்திலும் பினாங்கு மாநகராட்சி இந்தத் தொழில் நுட்ப வருகை அமைந்திருந்தது.


மாநில மாநகராட்சி சேவைகள் துறை இயக்குநர் ரஷிதா ஜலாலுதீன் தலைமையில் வந்திருந்த சம்பந்தப்பட்ட தரப்பினர், திடக்கழிவு  மற்றும் சுழல் கழிவுத் தொட்டி  செயல்பாடுகளின் கொள்கை வகுப்பாளர்களுக்கு, குறிப்பாக ஒரு நிறுத்த மையக் குழுவிற்கு, மிகவும் முறையான அதே வேளையில் ஆக்ககரமான நவீன கழிவு மேலாண்மைத் தொழில் நுட்பத்தை செயல்படுத்துவது தொடர்பில் நேரடி வெளிப்பாட்டை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.


இவர்களின் வருகை குளுகோர் சுங்க குடியிருப்புகள் பகுதி மற்றும் பத்து மவுங் பகுதியில் உள்ள பரண் வடிவமைப்பின்தானியங்கி கழிவு சேகரிப்பு அமைப்பின் மீதான மதிப்பாய்வு மேற்கொள்ளவும் நோக்கமாகக் கொண்டிருந்தது. இந்த அமைப்பு, நிலத்தடி குழாய் வலையமைப்பை பயன்படுத்தி கழிவுகக் சேகரிப்பு மையத்திற்கு தானாக வழங்கும் செயல்முறையில் அதன் வழக்கமான சேகரிப்பு முறைகளைக் குறைக்கும் வகையில், திடக்கழிவு சேகரிப்பின் புதுமையான அணுகுமுறையைக் கையாள்வதாகும்.


நகர்ப்புற மேம்பாடு மற்றும் புதிய வீடமைப்புத் திட்டங்களில் இந்த தானியங்கி கழிவு சேகரிப்பு முறையை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை மாநகர் மன்றம் கருத்தில் கொள்ள, இந்த கள ஆய்வு  முக்கியமென்று கருதப்பட்டதன் விளைவாக, இந்த அமைப்பை  செயல்படுத்துவது நீண்டகால நன்மையைக் கொணருமென்றும் திடக்கழிவு மேலாண்மையில் மாநகர் மன்றத்தின் இயக்கச் செலவுகளை மீதப்படுத்தும் திட்டமாகவும் இது உதவுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஒட்டு மொத்தமாக, இந்த தொழில்  நுட்பத்தின் மூலம் நகர்ப்புற  திடக்கழிவு மேலாண்மையில்  நவீனமய அம்சங்களை  பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளின் தெளிவான படிப்பினை மாநகர் மன்ற தரப்பினர்களுக்கு இந்த வருகை நன்றே புலப்படுத்தியிருப்பதோடு, இத்திட்டத்தின் வாயிலாக எதிர்வரும் காலங்களில் உள்ளூர் சமூகங்களுக்கு தூய்மையான மற்றும் பாதுகாப்பான  நகர்ப்புற சூழலை உறுதி  செய்வதற்கான நம்பிக்கைக்கு  வழி பிறந்திருக்கிறது.

Post ImagePost Image

Leave a Comment
Trending News