Alaioli
அனைத்து கட்சியினரும் எதிர் மறை எண்ணங்களை கை விட்டு நாட்டு நலனுக்குத் தேவையான நேர்மறை சிந்தனையைக் கை கொள்ள வேண்டும்=  பாப்பா ராய்டு வேண்டுகோள்.

எஸ்.எஸ்.மணிமாறன்.

ஷா ஆலம்.   அனைத்து கட்சியினரும் எதிர் மறை எண்ணங்களைக் கைவிட்டு நாட்டு நலன் கருதி நேர்மறைச் சிந்தனைகளை முன்னெடுத்து செயல்பட வேண்டும் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் வேண்டுகோளை முன் வைத்தார்.  அதற்கான மன வலிமையும் நேரான சிந்தனைகளும் இருந்தால் மட்டுமே எந்தப் பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்க்கமான முடிவு தெரியும் என்று அவர் கோடிட்டு காட்டினார். 


கட்சி கள் மேலிடத்தில் எதிர்மறையானக் கருத்துகளும் குழப்பங்களும் தொடர்ந்தால் அதிகம் பாதிக்கப் பட போவது அப்பாவி மக்களே என்பதால், தன்முனைப்பான கருத்துகளை முன் வைத்து செயல் பட்டால் மட்டுமே பதட்டம் இல்லாமல் சமூகத்தை நல்ல முறையில் வழி நடத்த முடியும் என்ற நம்பிக்கையை ஆலோசனையை பாப்பா ராய்டு முன் வைத்தார்.


உலக அரங்குகளில் உலக மேடைகளில் என்னதான் நடக்கிறது என்பதை முழுமையாக அறிந்து கொள்ளாமல் கட்சித் தலைவர்கள் பதட்ட நிலையிலேயே இருந்தால் மக்கள் மத்தியில் இதே போன்ற எதிர் மறைக் கருத்துகளும் பரவலாக சென்று சேர்ந்து மேலும் அதிக பட்ச பிரச்சினைகளை உருவாக்கி விடும் என்று பாப்பா ராய்டு எச்சரிக்கை விடுத்தார்.


நாட்டில் மோசமான கோவிட் 19 கொடும் தொற்று பரவிய காலத்தில், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தாமல் அவற்றை எப்படி எதிர் கொள்வது, எப்படி களைவது என்று அனைவரும் ஒரே சிந்தனையுடன் செயல் பட்ட காரணத்தால், கோவிட் 19 தொற்றை எதிர் கொண்டு எப்படி அனைவரும் சேர்ந்து அதை நாட்டை விட்டு முற்றாக விரட்டி அடித்தார்களோ


அதே போன்ற உறுதியான மன வலிமையுடன் தற்போது மக்கள் மத்தியில் எதிர் நோக்கி வரும் பெட்ரோல் எரிபொருள் தட்டுப் பாடுகளை சமாளித்து அவற்றையும் வெற்றிகரமாக முறியடித்து நாட்டை தொடர்ந்து அமைதிப் பூங்காவாக மாற்றி அமைக்கும் கடமையும் பொறுப்பும் அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது என்று பாப்பா ராய்டு தமது  மனம் திறந்த கருத்தை இங்கு வெளியிட்டார்.

Post Image

Leave a Comment