Alaioli
சாலை விபத்தில் இறந்த அமிருல் ஹஃப்பிஸீன் மனைவிக்கு மாதந்தோறும் ரிம. 2,888.17 ஆயுட்கால ஓய்வூதியம்= சொக்கோ நிறுவனம் அறிவிப்பு.

எஸ்.எஸ்.மணிமாறன்.

கிள்ளான் ஏப்ரல் 4.   கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கு கிள்ளான் ஜாலான் ராயா பாராட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில், வாகனத்தால் மோதுண்டு தூக்கியெறியப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மோட்டார் சைக்கிளோட்டி யான அமிருல் ஹஃபிஸ் ஒமார் குடும்ப நலனையும் 3 பிள்ளைகள் எதிர்காலத்தையும் கருதி சொக்சோ நிறுவனம் ஆயுட்கால ஓய்வூதியமாக மாதந்தோறும் ரிம. 2,888,17  தொகையை அவரது மனைவியிடம் தாம் வழங்கியதாக சொக்சோ தலைமை அதிகாரி டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் அஸிஸ் முகமட் அலை ஒளியிடம் தெரிவித்தார்.


அவரது மனைவியிடம் காசோலையை வழங்கிய அதிகாரி, 33 வயது வயது நிரம்பிய அமருல் ஹஃப்பிஸ் டிவிஎச் மலேசியா தனியார் நிறுவனத்தில் 15 ஆண்டுகளாக வேலை செய்து வந்த காரணத்தால் சொக்சோ சலுகை கொண்ட அவருக்கு 1969ஆம் ஆண்டின் அக்தா 4 இன் கீழ் அதற்கான சலுகைகள் இருப்பதால் இந்ந ஓய்வூதியம் முன்னெடுக்கப்பட்டு வழங்கப் பட்டதாக டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் அலை ஒளியிடம் கூறினார்.


இதற்கிடையே, விபத்தில் கணவரைப் பறிகொடுத்து துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறிய ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராம்ராஜ், குடும்பத்தினரிடம் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியதுடன் உயிரிழந்தோரின் மூன்று பிள்ளைகள் கல்விக்காக ஆறு மாத காலத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

Post Image

Leave a Comment
Trending News