Alaioli
ஒரு ஆலயத்திற்கு நிலம் கிடைத்தால், மற்றொரு ஆலய நிர்வாகத்தினர்   ஏன் கொடுத்தீர்கள் என்று காழ்ப்புணர்வுடன் கேள்வி எழுப்புகின்றனர்=. பாப்பா ராய்டு விளக்கம்

 எஸ்.எஸ்.மணிமாறன்.

ஷா ஆலம்.  ஏப்ரல் 4.  ஒரு ஆலயத்திற்கு நிலம் கிடைக்கப் பெற்றால் அதைப் பொறுத்து கொள்ளாத மற்றொரு ஆலயத் நிர்வாகத்தினர்  ஏன் அந்த ஆலயத்திற்கு மட்டும் நிலம் வழங்கினீர்கள் என்று காழ்ப்புணர்ச்சி யுடன் தம்மிடம் கேள்வி எழுப்பி வந்துள்ளதை மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அது குறித்த தெளிவான விவரங்களை அலை ஒளி செய்தியாளரிடம் விவரித்தார்.   


பாங்கி லாமா அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தலைவர் மற்றும் நிர்வாகத்தினர் தம்மிடம் சில தேவையற்ற குற்றச் சாட்டுகளையும் சுமத்தியுள்ளனர்.   அதே வேளையில், கைபேசியிலும் மிரட்டியும் உள்ளனர். இது அவர்களின் நல்ல நடவடிக்கையோ பண்பான செயலோ இல்லை என்று பாப்பா ராய்டு தெளிவுப் படுத்தியுள்ளார். 


நீண்ட காலமாக நீடித்து வரும் யுகேஎம் மாரியம்மன் ஆலய நிலப்பிரச்சினைத் தொடர்பில் அதன் நிறுவனத்தினர் மேம்பாட்டுத் திட்டம் வரும்போது அதற்கான நிலம் நிச்சயம் பின்னர் ஒதுக்கப்படும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சினை சுமூகமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது. இதற்கிடையே, பாங்கி லாமா மாரியம்மன் ஆலய நிர்வாகத்தினர், யுகேஎம் மாரியம்மன் ஆலயத்திற்கு ஏன் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இது  இரண்டு ஆலயங்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒரு தனிப்பட்ட நீண்ட கால தீர்க்க முடியாத பிரச்சினையாக தாம் கருதுவதாக அவர் தெரிவித்தார். இந்த நாட்டில் நாம் சிறுபான்மையினர் என்பதால் தேவையற்ற பிரச்னைகளில் தலையிட்டு மோதிக் கொள்வதைத் தவிர்த்து விட்டு,  நிலம் கிடைத்த ஆலயத்தின் மீது ஏன் கொடுத்தீர்கள் என்று  இது போன்ற கேள்விகளை இனியும் எழுப்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


உங்கள் ஆலய நிலத்திற்காக முயற்சி எடுத்து வெற்றி பெறுங்கள். மேலும், மூன்றாம் தரப்பினர் ஆலய  விவகாரங்களில் தொடர்ந்து தலையீடு வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாக பாப்பா ராய்டு அலை ஒளியிடம் கூறினார் ஆலயத்திற்கான நிலம் கிடைக்கப் பெற்றவர்கள் அதை முறைப்படி ஆலயத்தை நிர்மாணித்து சரியாக செயல்படுத்த வேண்டும் என்று அவர் ஆலோசனை விடுத்தார்.

Leave a Comment
Trending News