Alaioli
மடானி மார்ட் உத்வேகத் திட்ட கடையை தொடக்கி வைத்த பிரதமர் அன்வாருக்குப் பாராட்டு=. உமா நந்தினி வாழ்த்து.

 எஸ்.எஸ்.மணிமாறன்

பந்திங்.   மடானி மார்ட் உத்வேகத் திட்டத்தின் வாயிலாக நேற்று முதல் கடையை வெற்றிகரமாகத் திறந்து வைத்து இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கைகளை விதைத்த நாட்டின் பிரதமர் கெ அடிலான் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு கோலலங்காட் கெ அடிலான் மகளிர் அணியினர் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாக அதன் மகளிர் தலைவி உமாநந்தினி ஞானப்பிரகாசம் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


அடுத்தடுத்து உருவாக விருக்கும் மடானி மார்ட் கடைகள் வாயிலாக அதிகமானோருக்கு வேலை வாய்ப்புகள் பெறுவதோடு அவர்கள் இது போன்ற கடை வியாபாரத் துறைகளில் கூடுதல் அனுபவங்களையும் திறமைகளையும் பெற முடியும் என்ற நம்பிக்கை வார்த்தைகளை முன் வைத்துள்ள பிரதமர் அன்வாரின் இந்த அரிய முயற்சி தொடரவும் வெற்றி பெறவும் மனம் திறந்த வாழ்த்துகளை தாம் முன் வைப்பதாக உமா நந்தினி அலை ஒளியிடம் கூறினார்.


நாட்டில் உள்ள இளையோர் பலர் வேலை வாய்ப்புகளைத் தேடி அலையும் இந்த வேளையில், மடானி மார்ட் உத்வேகக் கடைகள் நிச்சயம் வேலை வாய்ப்புகளை அவர்களுக்கு உருவாக்கித் தரும் என்று தாம் பெரிதும் நம்பிக்கை வைத்திருப்பதாக உமா நந்தனி தெரிவித்தார்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News