Alaioli
சித்தியவான் முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளி வளாகமே தமிழால் மணந்தது ; டத்தோ சிவநேசன் பாராட்டு..!

டிகே.மூர்த்தி,

மஞ்சோங், ஏப்ரல் 4-பல பாடகர்கள் ஒன்றிணைந்து பாடும்போது “கோரஸ்” என்பதுதான் இத்தனைக் காலம் நடைமுறையில் பேசிவந்துள்ளோம். “கோரஸ்” என்னும் வரி தமிழில் “குழு இணை” என்ற அழகுத் தமிழை மஞ்சோங் முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளியில் நடந்த “குழு இணைப் பேச்சு போட்டியில் கற்றுக் கொண்டேன். இதற்கு காரணமாக இருக்கும் “பேரா மாநில இந்து தர்ம மாமன்றம்” தலைவர் கிருஷ்ணனை வெகுவாகப் பாராட்டுகிறேன் என்றும் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் அச்சலிங்கத்தின் உரையை அரசியல் செயலாளர் முத்துசாமி வாசித்தார். 


நம் மாணக்கர்கள் கல்வி வெற்றியில் சலைத்தவர்கள் அல்ல. இப்பள்ளியின் முன்னாள் மாணவர் சக்திவேல் கணேசன் என்பவர் 2025 ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் (தமிழ்+தமிழிலக்கியம்) உள்ளிட்ட பாடங்களில் 11A  பெற்றுத் தமிழுக்கும் புகழ் சேர்த்துள்ளார் என்ற தகவலை அறிந்து அம்மாணவரையும், பெற்றோரையும் உங்கள் சார்பில் வாழ்த்துகிறேன். மேலும், இன்று நடைபெற்றுள்ள மாநில அளவிலான தமிழப்பள்ளி மாணவர்கள் “குழு இணைப்  பேச்சுப்போட்டியில் பங்கேற்ற நம் மாணவர்களிடம் குடிகொண்டிருக்கும் கல்வி ஆற்றலையும், எஸ்பிஎம் மாணவரின் தமிழ்மொழி சிறப்பையும் காணும்போது முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளி வளாகமே தமிழால் மணக்கக் கண்டேன். 


தங்கள் பிள்ளைகள் எல்லா பாடங்களில் சிறந்த தேர்ச்சிப் பெற்றிட வேண்டும் என்ற சிந்தனையில் தேர்வுக்கு 6 அல்லது 7  பாடங்களில் அமர்ந்தால் போதும் என்று நினைக்கின்றனர். அந்த நினைப்பு தான் தமிழ் மற்றும் தமிழிலக்கியம் என இவ்விரு பாடங்களைத் தவிர்க்கும் நிலைக்கு ஆளாகின்றனர். காரணம் தமிழ் மொழி கட்டாயப் பாடம் இல்லை என்பது தங்களுக்கு சாதகமாக யோசிக்க வைக்கும் பெற்றோர்களையும் பார்க்கின்றோம். அத்தகைய சூழலில் பேரா மாநில தமிழ்ப்பள்ளி சார்ந்தவர்கள், மாநில அரசிடம் மானியம் கேட்டு என்னுடைய அலுவலகத்திற்கு வந்தால், அவர்களின் பிள்ளைகள் தமிழ்ப்பள்ளியில் படிப்பதை கொடுக்கப்படும் பாரத்தில் கேட்கப்படும் கேள்விக்கு எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும் என்பதில்  உறுதியாக இருக்கிறேன் என்றார் டத்தோ சிவநேசன்.   


தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களே தங்கள் குழந்தைகளை பிறமொழிப் பள்ளிகளுக்கு அனுப்பினால், தமிழ்ப்பள்ளி மீது நம்பிக்கைக் கிடையாது என்பதனை தானே இது காட்டுகிறது.  தமிழ்ப்பள்ளி வருமானத்தை மட்டுமே கவனத்தில் கொண்டிருக்காமல் பெரும்பான்மை ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு கூடவே அழைத்து வரும் ஆசிரியர்களையும் இவ்வேளையில் வாழ்த்துகிறேன். தமிழ்ப்பள்ளியில் படிக்க வைக்கவில்லை என்பது அவர்களின் துரதிர்ஷ்டமா? அல்லது பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவது அவமானமா? உலக அளவில் அதிகமான (528) தமிழ்ப்பள்ளிகள் என்ற நிலையில், இரண்டாம் இடத்தில் மலேசியாவும், மாநில அளவில் பேரா 134 தமிழ்ப்பள்ளிகள் என்ற முதல் இடத்திலும் சிறப்பாக மிளிர்கிறது. 


நாம் எந்த வகையிலும் குறைந்தவர்களோ அல்லது சளைத்தவர்களோ அல்ல. நம்மை நாமே மதிக்கவில்லை என்றால், மற்றவர்கள் நம்மை மதிக்க மாட்டார்கள். நாம் நமக்குள் வைத்திருக்கும் தாய்மொழி பற்றின் மதிப்பீடே மற்றவர்களுக்கு நாம் யார்? நம் அடையாளம் என்ன? என்பதைக் காட்டும். நம் அனைவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அது தமிழ்ப்பள்ளி மூலமே கிடைக்கப் பெற்றுள்ளோம் என்பதை மனதில் வைப்போம். உங்களோடு பேசுவதற்கு பேரா அரசுக்கு வாய்ப்பு வழங்கிய ஏற்பாட்டுக் குழுவுக்கு நெஞ்சம் நிறந்த கடப்பாட்டையும்-விசுவாசத்தையும் தெரிவிக்கிறேன் எனக் கூறி உரையை நிறைவு செய்தார்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News