Alaioli
பெண்களின் சுய முன்னேற்றத்திற்கு நாங்கள் துணைச் செய்கிறோம்  -கவிதா பாலசுப்பிரமணியம்

சத்யா பிரான்சிஸ்

பட்டர்வொர்த்  ஏப்ரல் 6- நமது சமூகத்தில் பெண்கள் தொழில்துறையில் சுய முன்னேற்றம் காண வேண்டும். பல்துறையிலும் கைத் தொழிலை மேற்கொள்வதற்கு நாங்கள் தூண்டுதல் தந்து வருகின்றோம். இன்று அவர்களுடைய தயாரிப்பு பொருட்களையும் இது போன்ற நிகழ்ச்சிகள் வழியாகப் பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றோம் என்றார் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் கவிதா பாலசுப்பிரமணியம்



பெண்களுக்காக அவர் நடத்திய பெண்கள் தின சிறப்பு விழாவில், பெண்களால்  சுயமாகச் சிறு தொழில் செய்ய முடியும். அவர்களில் தன்முனைப்போடு செயல்பட்டு வரும் 15 சிறு தொழில் செய்யும் பெண்களும் கலந்து கொண்டு அவர்களுடையத் தயாரிப்பு பொருட்களைக் காட்சிக்கு


பெண்கள் குடும்பத்தின் கண்கள் மட்டுமல்ல நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அவர்கள் கண்களாக உள்ளார்கள். பெண்களால் எதுவும் செய்ய இயலாது என நினைப்பவர்களையும் சிறு கைத் தொழிலில் ஈடுபடுத்தி அவர்கள் வெற்றிகரமாகத் தொழிலை வளர்த்துக் கொள்ளத் தேவையான ஆலோசனைகளை \"பட்டர்பிளை எம்பயர் விமன்\" (butterfly empire women) என்ற நிறுவனத்தின் வழி வழங்கி வருகிறோம்.



பெண்கள் சுய முன்னேற்றம் காணத் தனித்து வாழும் தாய்மார்களும் பி 40  தரவரிசை சார்ந்த பெண்களுக்கும் சுயமாகச் சிறு தொழில் செய்ய வேண்டும் என ஆர்வமுள்ள பெண்களுக்கும், மாணவிகளுக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் வழிகாட்டி வருகின்றேன் என கவிதா மேலும் கூறினார். 



பெண்கள் சுயதொழில் செய்து பணம் தேட ஆரம்பித்து விட்டால்,  திருமணம் ஆன பின்பும் ஆண்களையே சார்ந்து இருக்கும் நிலையில் மாற்றம் ஏற்படும். நான் \"சிநேகம்\" என்ற இயக்கத்தை ஆரம்பித்து பெண்களுக்கு மனநல ஆலோசனைகளைக் கடந்த எட்டு ஆண்டுகளாகச் செய்து வருகின்றேன் என அவர் மேலும் கூறினார்.



பெண்களின் சாதனையை அங்கீகரிக்கும் வகையில் மூவருக்கு ஊக்கமூட்டும் விருதுகள் வழங்கப்பட்டன.  டி எஸ் கே டிபன் நிறுவனத்தின் சசிகலா ராமையா, பேக்கரி தொழிலில் 5 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் நாகேஸ்வரி அய்யாவு,  ஆர்பிவிஷன் ரிசோசர்ஸ்  பிரவினா திருச்சந்திரன் ஆகியோர் இந்த விருதுகளைப் பெற்றனர். 


சிறந்த ஆடை அணிந்து நிகழ்வில் கலந்து கொண்ட சங்கீதா, திருமதி டாத்தி, நளினி விக்டர் ஆகிய மூவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை டத்தோ டாக்டர் புலோரன்ஸ் சின்னையா எடுத்து வழங்கினர். நிகழ்வின் இறுதியில் அணிச்சல் வெட்டும் சடங்கு இடம்பெற்றது.கேகே பட்டர்பிளை டிரேடிங் எம்பயர் நிறுவனத்தின் நிறுவனர் குகனேஸ்வரன் உட்பட நூற்றுக்கும் அதிகமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Post ImagePost ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News