Alaioli
கேஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் சாதனை பெருமிதமானது - தலைமையாசியர் புகழாரம்!!

சித்தியவான்,ஏப்05: பேரா மாநில நிலையிலான குழு இணைப் பேச்சுப் போட்டியில் கேஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மூன்றாம் நிலை வெற்றியாளராகத் தேர்வானது சாதனைக்குரியது என்றும் பள்ளியின் அடைவுநிலையில் அது பெருமிதமானது என அப்பள்ளியின் தலைமையாசியர் திருமதி.யசோதா நாராயணசாமி  தெரிவித்தார்.


இந்து தர்ம மாமன்றம்,அருள் நிலையம் ஆகியவற்றின் ஆதரவோடு புண்டூட் தமிழ்ப்பள்ளியின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாநில அளவிலான இப்போட்டியில்   மாணவர்கள் குறைவான பள்ளியாக இருந்தாலும் கேஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மூன்றாம் நிலையை எட்டியிருப்பது நிறைவான சாதனையாகவே பார்க்கின்றோம்.


மேலும்,இப்போட்டியில் இப்பள்ளியைச் சார்ந்த மாணவி மீராஸ்ரீ தயராஜன் சிறந்த வழிநடத்துநருக்கான விருதினையும் வென்றது பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியின் சான்று என்றார்.


தோட்டப்புறப்பள்ளியாகவும் மாணவர் எண்ணிக்கை குறைந்தப் பள்ளியாகவும் கேஷ்வூட் தோட்டப் பள்ளி திகழ்ந்தாலும் அம்மாணவர்களின் கல்வி சாதனையோடு புறப்பாடம் சார்ந்த செயல்பாடுகளும்  வெற்றிகளும்  நனிச் சிறந்த இலக்கை எட்டுவதிலிருந்து ஒருபோதும் பின் வாங்கியதில்லை எனவும் குறிப்பிட்ட தலைமையாசிரியர் இப்பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் மாணவர்களைத் தயார்ப்படுத்திய விதமும் அம்மாணவர்களை வெற்றியின் இலக்கை நோக்கி கொண்டு சென்றுள்ளதாகவும் கூறினார்.


இச்சாதனையானது இப்பள்ளியின் கல்வித் தரத்தையும் பள்ளியின் சிறப்பையும் ஓங்கச் செய்திருப்பதோடு மாநில அளவில் கேஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு தனித்துவமான அடையாளத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post ImagePost Image

Leave a Comment
Trending News