Alaioli
டிகே.மூர்த்தி,
தெலுக் இந்தான், ஏப்ரல் 6-தமிழ்ப்பள்ளி மாணாக்கர் எண்ணிக்கை மற்றும் அதன் வளர்ச்சிக்கு பெற்றோர்களின் பங்கு ஈடு இணையற்றது. மேலும் பி40 சேர்ந்த பெற்றோர்கள் பள்ளி நிகழ்வுகளில் பங்கேற்பதில் தாழ்வு மனபாண்மை கொண்டிருக்கக்கூடாது என்ற ஆலோசனையை பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் அச்சலிங்கத்தின் “அலை ஒளி” ஊடகத்தின் செய்தியைப் பார்த்து பரவசம் அடைந்தவர்களில், நாடறிந்த தமிழ் எழுத்தாளரும்-வாசகருமான அசோதா பொன் பத்துமலை சுட்டினார். நேற்று முன்தினம் ஈப்போ குனோங் ராபாட் தமிழ்ப்பள்ளி நிதி திரட்டும் விருந்து நிகழ்ச்சியில் டத்தோ சிவநேசன் மேற்கோள்காட்டி ஆற்றிய உரை அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்றும் அது குறித்த அசோதா குறிப்பிட்டார்.
அந்த வகையில் எல்லா மாநில இந்திய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தமிழ்ப்பள்ளிக்காக தங்களின் முழு கவனம் செலுத்தப்பட்டு தீர்வுக் காண்கின்றனர். ஆனாலும், டத்தோ சிவநேசன் தமது மூன்று பிள்ளைகளையும் சிலாங்கூர் செர்டாங் தமிழ்ப்பள்ளியில் படிக்க வைத்திருக்கும் ஓர் இந்திய தலைவராவார் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அதே வேளையில், நான் அரிசியல்வாதியோ அல்லது எந்தவொரு அரசியல் கட்சியும் சார்ந்து பேசவில்லை என்பதை இங்கு பணிவுடன் கூறுகின்றேன்.
மேலும், தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் இடைநிலைப் பள்ளியில் எஸ்பிஎம் அரசாங்கத் தேர்வில் அமரும்போது 6 அல்லது 7 பாடங்கள் தேர்வு செய்கின்றவர்களும் இருக்கின்றனர். அதனால், விருப்பப் பாடங்கள் தமிழ் மொழி மற்றும் தமிழிலக்கியத்தையும் தவிர்த்துவிடும் மாணவர்களையும் அவர்களுக்கு அப்படிப்பட்ட ஆலோசனை வழங்குபவர்கள் இருக்கின்றனர் என்ற இந்த விடயத்தில், பேரா சித்தியவான் முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளி நிகழ்வொன்றில் டத்தோ சிவநேசன் நேர்மறையாகப் பேசியிருப்பது தமிழ் எழுத்தாளர் என்ற ரீதியில் அவரை நான் பாராட்டுகிறேன் என்றார் அசோதா.
அதே சமயத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழ்ப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் கடந்த (2025) ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் மாணவர்கள் பலர் 11A மதிப்பெண்கள் பெற்று தமிழ்ப்பள்ளியின் பெருமையை வெற்றிச் சிகரத்தில் வைத்துள்ளனர். இதனை ஊடகங்கள் மற்றும் வானொலி & தொலைக்காட்சி தமிழ்ச் செய்திகள் மூலம் அறிந்து அகமகிழ்ந்தோம். நம் மாணவர்களின் வெற்றி என்பது வரும் ஆண்டில் 6 வயது பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி வைப்பதற்கு சம்பந்தப்பட்ட நம் பெற்றோர்களுக்கு ஒரு நம்பிக்கையூட்டும் ஆதாரமாகும்.
தவிர, இது குறித்த நம் பெற்றோர்கள் பலராலும் புரிந்து கொள்ளப்படுகின்றனர். அதனால், அடுத்த ஆண்டு ஜனவரியில், பள்ளி தொடங்கும்போது பெற்றோர்கள் சொந்தமாகவே தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி வைப்பது என்ற நோக்கம் வேகமாய் விரிவடைந்து வருகிறது. தமிழ்ப்பள்ளிகளில் தேசிய மொழி மலாய், தாய்மொழி தமிழ், உலக மொழி ஆங்கிலம், கணிதம் மற்றும் வரலாற்றுப் பாடங்களை (வல்லுநர்கள்) திறமைவாய்ந்த நம் ஆசிரியர்கள் போதிக்கின்றனர் என்பதனை அறிந்துள்ளோம் என்றும் பத்தாங் பெர்சுந்தை தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவருமான அசோதா எடுத்துரைத்தார்.
பினாங்கு
சபாவுடனான இறுதி ஆட்டத்தில் பினாங்கு கால்பந்து அணிக்கு திரளான ரசிகர்கள் பேராதரவு!
தெலுக் இந்தான்
பேராக் மாநில தமிழ்ப்பள்ளிகளின் செழுமைக்கு டத்தோ சிவநேசன் ஆற்றலே..!
பட்டர்வொர்த்
பெண்களின் சுய முன்னேற்றத்திற்கு நாங்கள் துணைச் செய்கிறோம் -கவிதா பாலசுப்பிரமணியம்
பினாங்கு
Datuk Seri Dr. M. Saravanan Inaugurates Kaviyarasu Kannadasan Centenary Celebrations in Penang
ஷா ஆலம்
வரும் 11.4.2026.சனியன்று பந்திங் எம்சிஎஸ் கல்லூரியில் மாநில அரசின் ஜோப் கேர் சிலாங்கூர் வேலை வாய்ப்பு கார்னிவல் = பாப்பா ராய்டு அறிவிப்பு.
சித்தியவான்
கேஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் சாதனை பெருமிதமானது - தலைமையாசியர் புகழாரம்!!
கிள்ளான்
Veteran Broadcast Journalist Karam Singh Walia Passes Away at 67
கோலாலம்பூர்
SPRM tahan bekas pengerusi kuil seleweng dana, akan didakwa dalam masa terdekat