Alaioli
டிகே.மூர்த்தி
ஈப்போ, ஏப்ரல் 16-மலேசிய பரத கலாஞ்சலி அமைப்பு சார்பில், “நாட்டிய சேவை” என்னும் சிறப்பு நிகழ்வின் மூலம் நனிசிறந்த நடனக் காலைஞர்களின் அரிய படைப்பினைப் பார்க்கலாம்-இரசிக்கலாம், மகிழ்ச்சியால் பொங்கி எழலாம்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் முன்னெடுக்கப்படும் பரத நாட்டியக் கலை வழியாக இவ்வமைப்பு தனது உளமார்ந்த சேவையின் உணர்வை மேலோங்கச் செய்து கொண்டாடுவுள்ளது.
பேரா மாநில கலாச்சாரம் மற்றும் கலைத் துறை சார் (Jabatan Kebudayaan dan Kesenian negeri Perak) ஈப்போ ஜாலான் கால்ட்வெல் அமைந்துள்ள அரங்கில், வரும் 30.05.2026 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நேர்த்தியுடன் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக மாநில சமுதாய மத்தியில் நன்கு அறிமுகமான தொண்டர் திலகம் நாச்சிமுத்து கருப்பண்ணன் இந்நிகழ்வு குறித்த “அலை ஒளி” சமூக ஊடகத்திடம் கூறுகையில், நாட்டியக் கலையில் சிறந்தவர்கள் ஸ்ரீமதி மீரா வேணுகோபால் மற்றும் திவ்யாஷினி ஆவர் என்றார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், இவ்விருவரும் நாட்டியத் துறையில் தங்களின் அபாரத் திறமையினால் கால் பதித்தவர்கள்.அதன் மூலம் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற பல விருதுகளையும், பாராட்டுகளையும் கலை உலகிற்கே சமர்ப்பணம் செய்தவர்கள்.

இசைக்குழுவின் துணையுடன் நேரலை நிகழ்வில், மிக நுணுக்கமான மற்றும் வெளிப்பாட்டுமிக்க நடன அமைப்புகள் வெளிப்படுத்தும்போது பார்வையாளர்கள் கண்களுக்கு நல்விருந்தாகவும் எதிர்பார்க்கலாம் என நாச்சிமுத்து சுட்டினார்.
மேலும், மலேசிய பரத கலாஞ்சலி அமைப்பினர் நடத்தும் இந்நிகழ்வின் மூலம் அதன் பொற்கால விழாவை நினைவு கூர்தல் என்னும் நிலையில், சிறப்புப் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
அந்நிலையில், பரத நாட்டியத்தின் கருப்பொருள் அழகை நடனத்தின் வழி வெளிப்படுத்தும் எழில்மிகு கண்கவர் படைப்பினால், இந்தக் கலைவிழா சிறப்பிக்கப்படும் என்பதில் நாட்டியக் குழுவினர் உறுதியாக உள்ளனர்.
“விண்ணில் வில்லென வளைந்திட நடனம், நம்மை வியக்கச் செய்யும் விருந்தென” கவிஞர் கண்ணதாசனின் பாடலில் வரும் வரிகளுக்கு ஒப்பாகவும் பார்க்கலாம் என்றும் நாச்சிமுத்து விவரித்தார்.
இந்த நிகழ்வின் மூலம் கிடைக்கப்பெறும் லாபத்தைப் பேரா மாநில அறிவாற்றல் குறைபாடுகள் எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் (Perak Association for Intellectually Disabled) PAFID என்ற தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது.
சமீபத்தில் இந்த நாட்டிய நிகழ்ச்சி ஈப்போ Sekolah Semangat Maju என்னும் தளத்தில் நடத்தப்பட்டது. இதில் ப்ரையன் டான், டான் காங் ஷியோங், அலெக்ஸ் லோ பெங் வீ (PAFID) தலைவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் நாடறிந்த நல்வாழ்த்தாளர் எம்,கரத்து உள்ளிட்டோர் பலர் வருகை அளித்திருந்தனர்.
மேலும் தகவலுக்கு நாச்சிமுத்து 012 505 1959 / திவ்யாஷினி 010 464 1665 / ராஜ்தேஷ் கோபால் 019 253 4970 தொடர்புக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.-Alaiolinews
மலாக்கா
Pemandu bas pandu sebelah tangan ditahan polis
கோலாலம்பூர்
Lelaki intai wanita dalam tandas LRT didenda mahkamah
Pembunuhan
71 year old man involved in Kota Tinggi fatal shooting remanded for 7 days
பினாங்கு
LWHNPP Santuni Pesakit Dialisis, Raikan Rekod MBOR dan Lancar Kiosk Digital
பினாங்கு
14-Year-Old Penang Student Sets Malaysia Book of Records for Pi Recitation
பினாங்கு
உலக அமைதிக்கும் இந்தியர் பொருளாதார மேம்பாட்டிற்கும் பிரதமர் அன்வர் தலைமை ஏற்க வேண்டும் - டத்தோ பி.குணசேகரன் அறைகூவல்!
பினாங்கு
Pencapaian Cemerlang Pelajar Pulau Pinang terpahat dalam Malaysia Book of Records
இந்தியா
Modi’s Bold Claim: Massive BJP Victory Imminent in West Bengal Elections”