Alaioli
கோல சிலாங்கூர், வாகீசர் தமிழ்ப் பள்ளி மாணவர்கள்  மும்மொழிப் போட்டிகளில் வாகை சூடினர்- தீபன் சுப்ரமணியம் வாழ்த்து

எஸ்.எஸ்.மணிமாறன்


கோல சிலாங்கூர், ஏப்ரல் 16-  கோல சிலாங்கூர் மாவட்டத்தில் பழைமையான பள்ளிகளில் ஒன்றான, வாகீசர் தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற மும்மொழிப் போட்டிகளில் பங்கேற்ற இப்பள்ளி மாணவர்கள் சிறந்த படைப்புகள் மற்றும் திறனை வெளி கொணர்ந்து வெற்றி வாகைச் சூடினர் என்று சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும் பாராட்டுப் பத்திரமும் எடுத்து வழங்கிய புக்கிட் மெலாவத்தி சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் தீபன் சுப்ரமணியம் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


வாகீசர் தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியராக பதவியில் அமர்ந்து பள்ளி மாணவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆசிரியராக விளங்கி வரும் தலைமையாசிரியர் திருச்செல்வகுமாரின் கட்டுக் கோப்பான செயல்பாடுகளால் மாணவர்கள் தமிழ் மலாய் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் புலமையும் திறனும் பெற்ற மாணவர்களாக தற்போது உருவாகியுள்ளனர் என்று அவரது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.


இந்த நிகழ்ச்சி வெற்றி பெற பேராதரவு வழங்கிய சக ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினருக்கும் தீபன் சுப்ரமணியம் தமது பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டார்.-Alaiolinews

Post ImagePost Image

Leave a Comment