Alaioli
எஸ்.எஸ்.மணிமாறன்
ஷா ஆலம், ஏப்ரல் 17- சிலாங்கூர் மாநிலத்தில் வசித்து வரும் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மக்கள் நலத் திட்டத்தின் வாயிலாக 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டு 50 ஆயிரம் பேருக்கு மாதந்தோறும் தலா 100 ரிங்கிட் உதவித் தொகை 6 மாதங்கள் வரை தொடர்ந்து வழங்கப்படும் என்று இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவிப்பு செய்துள்ளார்.
பி 40 பிரிவின் கீழ் ஏழ்மையில் இருப்போரின் சிரமங்களை உணர்ந்த காரணத்தால் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
அதே வேளையில், வறுமைக் கோட்டில் இருக்கும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இலவச காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் என்பதால் சிலாங்கூர் மாநில அளவில் செயல்படும் 873 பள்ளிகளில் கல்வி கற்று வரும் ஏழை மாணவர்களுக்கு இலவச காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் என்று அமிருடின் தெரிவித்தார்.

இந்தத்திட்டம் வரும் ஆகஸ்டு 2026 முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
மேலும், மக்களுக்கு உணவு உற்பத்தியைப் பெருக்கித் தரும் மாநில அளவில் இருக்கும் விவசாயிகள் நலன் கருதி அவர்களுக்கு ஆறு மாதங்கள் வரை மாதந்தோறும் 450 ரிங் கிட் உதவித் தொகையும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, மாநில அளவில் மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்து அவர்கள் நன்மைக்கான உதவிகளை செயல்படுத்த- விருக்கும் மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியின் பொதுநல நடவடிக்கைகளுக்கு கோல லங்காட் மாவட்ட கெ அடிலான் மகளிர் அணியினர் வரவேற்பும் பாராட்டும் தெரிவிப்பதாக அதன் மகளிர் தலைவி உமாநந்தினி ஞானப்பிரகாசம் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.- Allaiolinews
சிலாங்கூர்
பந்தாய் ஜெராம் கடற்கரைப் பகுதியில் இருக்கும் நகராண்மைக் கழகத்தின் அங்காடிக் கடைகளுக்கான நேர்முகத் தேர்வில் 30 பேர் பங்கேற்பு- புஷ்பா ராஜன் தகவல்
சிலாங்கூர்
வசதி குறைந்த மக்கள் நலத் திட்டத்தில் மாநில அளவில் 50 ஆயிரம் பேருக்கு ரிம. 30 மில்லியன் ஒதுக்கீடு!- டத்தோ ஸ்ரீ அமிருடின் அறிவிப்பு
பகாங்
Kilang besi Gebeng meletup, 4 tercedera
கோலாலம்பூர்
Kedai emas disamun kumpulan bersenjata pistol, barang kemas hampir cecah RM10 juta dilarikan
சிலாங்கூர்
கோல சிலாங்கூர், வாகீசர் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மும்மொழிப் போட்டிகளில் வாகை சூடினர்- தீபன் சுப்ரமணியம் வாழ்த்து
பினாங்கு
அரா குடா, பெனாந்தி ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன் ஆலய இரத ஊர்வலத்தின் பயண விபரங்கள்
மலாக்கா
Pemandu bas ekpres, kekasih atas riba direman bantu siasatan polis