Alaioli
பந்தாய் ஜெராம் கடற்கரைப் பகுதியில் இருக்கும் நகராண்மைக் கழகத்தின் அங்காடிக் கடைகளுக்கான நேர்முகத் தேர்வில் 30 பேர் பங்கேற்பு- புஷ்பா ராஜன் தகவல்

எஸ்.எஸ்.மணிமாறன்

கோல சிலாங்கூர் ஏப்ரல் 17-  இங்கு, பந்தாய் ஜெராம் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் கண்காணிப்பில் இருந்து வரும் அங்காடிக் கடைகளை வியாபார நோக்கில் பெறுவதற்கான நேர்முகத் தேர்வில் 30 பேர் பங்கேற்று தெரிவு செய்யப்பட்டதாக கோல சிலாங்கூர் நகராண்மைக்கழகத்தின் உறுப்பினர் புஷ்பா ராஜன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


பந்தாய் ஜெராம் கடற்கரைப் பகுதிக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, அங்காடிக் கடைகளைப் பெற்று வியாபாரம் செய்வோர் தூய்மையான உணவுப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.



அதே வேளையில் அப்பகுதி தூய்மைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கட்டாய நிபந்தனைகளை முன் வைத்தே அங்காடி வியாபாரிகள் தெரிவு செய்யப்பட்டதாக புஷ்பா ராஜன் அலை ஒளியிடம் கூறினார்.- Alaiolinews

Post ImagePost Image

Leave a Comment
Trending News