Alaioli
சுங்கை காராங்கானில் பெனால்டி கால்பந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது

கெடா மாநிலத்தின் சுங்கை காராங்கான் சமூக நல இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெனால்டி கால்பந்து போட்டி அண்மையில் உற்சாகமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சுங்கை காராங்கான சமூக நல இயக்கத் தலைவர் திரு. கிருஷ்ணன் தலைமையேற்றார். மொத்தம் 24 அணிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டி, உள்ளூர் சமூகத்தில் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.


போட்டியை வெற்றிகரமாக நடத்த ஆதரவு வழங்கிய உள்நாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ சாய்புடன் நசுச்சியோன், டாக்டர் சின்னாயா – டாக்டர் ஜோபினா நாயுடு தம்பதிகள், ஆசிரியர் ராசாக், PKR செயற்பாட்டாளர் திரு. கோபி, பாடாங் செராய் JPKKP தலைவர் திரு. பாலன் ஆகியோருக்கு திரு. கிருஷ்ணன் தனது நன்றியை தெரிவித்தார்.

Leave a Comment
Trending News