Alaioli
சிலிம் ரீவர் தமிழ்ப்பள்ளிக்கு வெ.10 ஆயிரம் - தஞ்சோங் மாலிம் வட்டாரத்தில் வேலை வாய்ப்பு!  சிவநேசன் அறிவித்தார்!!

முஹாலிம் மாவட்டத்தில் நனிச் சிறந்த தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றான சிலிம் ரீவர் தமிழ்ப்பள்ளிக்கு வெ.10 ஆயிரம் வழங்குவதாக மாண்புமிகு அ.சிவநேசன் அறிவித்தார்.


தீபாவளியை முன்னிட்டு சுமார் 150பேருக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் அப்பள்ளியின் தலைமையாசிரியர் வைத்த கோரிக்கையைஏற்று உடனடியாக அந்த அறிவிப்பை சிவநேசன் பதிவு செய்தார்.


மேலும்,இந்த வட்டாரத்திலுள்ள ஆலயங்களுக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் தாம் தொடர்ந்து மானியம் வழங்குவதோடு அவை எதிர்நோக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு வருவதாகவும் மாநில சுகாதாரம்,மனிதவளம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான சிவநேசன் தனதுரையில் குறிப்பிட்டார்.


அதுமட்டுமின்றி,தாம் மாநில ஆட்சிக்குழுவில் இருக்கும் வரை இம்மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகள்,ஆலயங்களின் உரிமைகளும் நலன்களும் தொடர்ந்து காக்கப்படும்.அவற்றின் வளர்ச்சியும் மேம்பாடும் உயர்ந்தே நிற்கும் என்றார்.


முன்னதாக தஞ்சோங் மாலிம் வட்டாரம் அதீத வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும் வேலை வாய்ப்புகள் அதிகளவில் இங்கு ஏற்படப்போவதாகவும் மேலும் கூறினார்.


ஷா ஆலம் புரோட்டன் கார் நிறுவனம் முற்றாக அதன் செயல்பாட்டை நிறுத்தி கொண்டதோடு இனி அதன் முழுமையான செயல்பாடு தஞ்சோங் மாலிம் புரோட்டோன் சிட்டியில் தான் இயங்கும் என்றார்.


புரோட்டோன் நிறுவனத்தோடு மேலும் சில கார் நிறுவனங்கள்,கார் உபரிபாக நிறுவனங்கள் உட்பட இங்கு பல்வேறு நிறுவனங்கள் அதன் செயல்பாடுகளைத் தஞ்சோங் மாலிமிற்கு கொண்டு வரும் நிலையில் வேலை வாய்ப்பு பெருன் அளவில் ஏற்படும் சாத்தியம் இருப்பதை மாண்புமிகு சிவநேசன் சுட்டிக்காண்பித்தார்.


சிலிம் ரீவர் தமிழ்ப்பள்ளி மண்படபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் திரு.பழனி சுப்பையா,ம இ கா தொகுதி தலைவர் பி.எஸ்.நாயுடு,சிலிம் ரீவர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர் முகமாட் ஷய்டி உட்பட பலர் கலந்து கொண்ட வேளையில் தலைமையாசிரியர் பழனி மாண்புமிகு சிவநேசன் தமிழ்ப்பள்ளிகளுக்காக ஆற்றி வரும் சேவைகள் குறித்து ஆழமாய் விவரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment
Trending News