Alaioli
செப்பராங் பெராய் மாநகர மன்ற பணியாளர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு!

எம்பிஎஸ்பி “வீர ஓரென்” பணியாளர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்ட வேளையில் 

தீபாவளி திருநாளை முன்னிட்டு செப்பராங் பிறை மாநகர மன்றத்தின் (MBSP) பணியாளர்களுக்காக சிறப்பு நன்கொடை வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.


மாநகர மன்ற உறுப்பினர் திரு பிரிதீப் குமார் களிதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், எம்பிஎஸ்பி சார்பில் பணிபுரியும் “வீர ஓரென்” எனப்படும் துப்புரவு பணியாளர்களுக்கான தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.


நிபோங் தெபால் சுத்தம் செய்யும் துறையின் தளத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மொத்தம் 35 பேர் கொண்ட எம்பிஎஸ்பி துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தீபாவளி நன்கொடை தொகைகளை பெற்றனர்.

பணியாளர்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கௌரவிக்கும் வகையில் இந்நன்கொடை வழங்கப்பட்டது. தீபாவளி காலத்தில் அவர்களின் நிதி சுமையை ஓரளவு குறைத்து, குடும்பத்துடன் மகிழ்ச்சியான பண்டிகையை கொண்டாடுவதற்கும் இது உதவும் என்று திரு பிரிதீப் குமார் கலிதாஸ் அவர்கள் தெரிவித்தார்.


மேலும், மாநகர மன்றத்தின் பணியாளர்களின் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டி வருபவராக மன்ற உறுப்பினர் அவர்களுக்கு, எம்பிஎஸ்பி நிர்வாகம் சார்பில் இதயபூர்வமான நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநகர மன்றத்தின் பல அதிகாரிகள், துறைத் தலைவர்கள், மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டு தங்களது ஒற்றுமையையும், பணியாளர்களுக்கான ஆதரவையும் வெளிப்படுத்தினர்.

தீபாவளி ஒளி உழைப்பாளர்களின் முகத்திலும் பிரகாசமாகட்டும் என்று பிரிடீப் கூறினார்.

Leave a Comment
Trending News