Alaioli
மலாயா பல்கலைக்கழகத்தின் சர்வதேச வாரம் 2025 - ஏற்பாட்டுக்குழுவுடன் சந்திப்பு!!

மலேசியா மாநாடு மற்றும் கண்காட்சி பணியகத்துடன் (MyCEB) சாத்தியமான ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பைப் பற்றி விவாதிக்க மலாயா பல்கலைக்கழகத்தின் சர்வதேச வாரம் 2025-இன் ஏற்பாட்டாளர்களுடன் நாடாளுமன்றத்தில் ஒரு சந்திப்பு சர்வதேச நிகழ்வுகள் சார்ந்தும் துறையை வலுப்படுத்துவதிலும், மலேசியாவில் பெரிய அளவிலான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதிலும் ஒத்துழைப்புக்கான பகுதிகளை ஆராய்வது குறுத்த இலக்கோடு இச்சந்திப்பு நடந்தேறியதாக அதன் தலைவர் மாண்புமிகு வ.சிவகுமார் தெரிவித்தார்.


இந்த அமர்வில், MyCEB-இன் தலைமை நிர்வாக அதிகாரி, வணிக நிகழ்வுகள், மாநாடுகள் மற்றும் சர்வதேச கண்காட்சிகளுக்கான முக்கிய இடமாக மலேசியாவை ஊக்குவிப்பதற்குப் பொறுப்பான சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் (MOTAC) கீழ் ஒரு தேசிய நிறுவனமாக MyCEB-இன் செயல்பாடுகள் மற்றும் பாத்திரங்கள் குறித்து தெளிவான மற்றும் விரிவான விளக்கத்தை வழங்கியதாகவும் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.


இந்த ஒத்துழைப்பு, மலாயா பல்கலைக்கழகத்திற்கு, ஆசியான் தலைமைத்துவம் 2025 உடன் இணைந்து நடத்தப்படும் மலாயா பல்கலைக்கழகம் சர்வதேச வாரம் 2025 போன்ற உலகளாவிய தர நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் சிறந்த வாய்ப்புகளைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாய்ப்பின் மூலம், இரு தரப்பினரும் சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்தவும், நிகழ்வு செயல்படுத்தலின் தரத்தை மேம்படுத்தவும், உலக அரங்கில் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நற்பெயரில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும் ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்பதையும் அவர் மேலும் சுட்டிக்காண்பித்தார்.


இந்த சந்திப்பு, மலேசியாவை ஒரு பிராந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக மட்டுமல்லாமல், வலுவான உள்கட்டமைப்பு, நிபுணத்துவம் மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தேசிய நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மனப்பான்மையால் ஆதரிக்கப்படும் சர்வதேச நிகழ்வுகளுக்கான சிறந்த மையமாகவும் மாற்றுவதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை  தொடர்ந்து உறுதிப்படுத்துவதாகவும் சிவகுமார் கூறினார்.

Leave a Comment
Trending News