ஓடி ஓடி உழைக்கின்ற
உத்தமர் சீலர் - வாழ்வின்
விண்ணைத் தொடும்
வானவில் வண்ணம் ..!
உலகம் தாழ்ந்து வணங்கிடும்
உயர்ந்த மனம் கொண்ட வீரர்...
செங்கதிரோன் விழிபாட்டில்
சேவையால் போற்றும் வீரன்,
சிங்கைத் தரணியில் எழுந்தவன் —
சிறந்த நம் சின்னையா வீரன்!
சிகரமென உயர்ந்த நெஞ்சம்,
சிந்தையில் மனித நேயம்,
சிரமமென வந்த போதிலும்,
சிலிர்க்கச் செய்யும் அவன் வேகம் !
அறிவும் அன்பும் அணிந்தவன்,
அமைதியில் ஜோதி ஒளியவன்
உழைப்பே அவனுக்கு உயிராகும்
உயிருக்கு உயிராய் நிற்பவன்
தமிழ்ப் பற்றாளன்
தரணி போற்றும் நாயகன்
கொடை நெஞ்சகம் கொண்டவன் - எங்கள்
முனைவர் சின்னையா தோழனே !
செ.குணாளன்