Alaioli
டிஏபி பாகான் லுவார் கிளையின் நீண்டகால உறுப்பினராகவும், பினாங்கு டெப்சியின் முன்னாள் நிர்வாக உறுப்பினராகவும் பணியாற்றிய சூரியப்பிரகாசம் (சூரியா), தகப்பனார் பெயர் ஜி. அசோகன் ஆகஸ்ட் 29, 2025 (வெள்ளிக்கிழமை) அன்று ஜொகூரில் திடீரென காலமானார்.
மிகுந்த துடிப்பும் உற்சாகமும் கொண்ட இளைஞரான சூரியப்பிரகாசத்தின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினருக்கு பேரிழப்பாகும் என்று, தன் மகனை இழந்து ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் ஜி. அசோகன் தெரிவித்தார்.

சமூக மற்றும் அரசியல் துறைகளில் ஆர்வம்கொண்டு இயங்கிய சூரியப்பிரகாசம், பல்வேறு இளைஞர் இயக்கங்களிலும் சமூக நிகழ்வுகளிலும் பங்காற்றியவர். கட்சியின் வளர்ச்சிக்கும் சமூக நலத்திற்கும் அவர் செய்த பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என பாகான் லுவார் டிஏபி கிளைத் தலைவர் கோபால் நாயுடு மற்றும் உறவினர்கள் அவரை நினைவுகூர்ந்தனர்.
ஜொகூரில் காலமான அவரது உடல் பினாங்கு மாநிலத்தின் கப்பளா பத்தாஸ் பெர்தாம் நகருக்கு கொண்டு வரப்பட்டு, இன்று (31-08-2025) மதியம் ஜாலான் சிராம் இந்து இடுகாட்டில் கடைசி அஞ்சலிகள் செலுத்தப்பட்ட பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மறைந்த சூரியப்பிரகாசத்தை இறுதிச்சடங்கில் பினாங்கு மாநில டிஏபி தலைவர்கள், டெப்சி உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
சமூகத்துடன் இயைந்த வாழ்வை வாழ்ந்த சூரியப்பிரகாசத்தின் திடீர் மறைவு, நண்பர்களிடமும் பொதுமக்களிடமும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிலாங்கூர்
பந்தாய் ஜெராம் கடற்கரைப் பகுதியில் இருக்கும் நகராண்மைக் கழகத்தின் அங்காடிக் கடைகளுக்கான நேர்முகத் தேர்வில் 30 பேர் பங்கேற்பு- புஷ்பா ராஜன் தகவல்
சிலாங்கூர்
வசதி குறைந்த மக்கள் நலத் திட்டத்தில் மாநில அளவில் 50 ஆயிரம் பேருக்கு ரிம. 30 மில்லியன் ஒதுக்கீடு!- டத்தோ ஸ்ரீ அமிருடின் அறிவிப்பு
பகாங்
Kilang besi Gebeng meletup, 4 tercedera
கோலாலம்பூர்
Kedai emas disamun kumpulan bersenjata pistol, barang kemas hampir cecah RM10 juta dilarikan
சிலாங்கூர்
கோல சிலாங்கூர், வாகீசர் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மும்மொழிப் போட்டிகளில் வாகை சூடினர்- தீபன் சுப்ரமணியம் வாழ்த்து
பினாங்கு
அரா குடா, பெனாந்தி ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன் ஆலய இரத ஊர்வலத்தின் பயண விபரங்கள்
மலாக்கா
Pemandu bas ekpres, kekasih atas riba direman bantu siasatan polis