Alaioli
தேசிய தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, கடந்த இரண்டு மாதங்களாக “அப்டவுன் பட்டர்வொர்த்” என்ற கருப்பொருளில், ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5.00 மணி முதல் இரவு 12.00 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுடனும் வியாபார சந்தையுடனும் பட்டர்வொர்த் மாநகரம் களைகட்டி வந்தது.

இந்நிகழ்ச்சிகளில் குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டும் போட்டி, பாடல் திறன் போட்டி, தேசிய தின ஆடை அலங்காரப் போட்டி, போரியா பினாங்கு, கொடி வழங்கும் விழா, வாடகை வண்டி ஓட்டுனர்களுக்கு வீட்டு உணவுப் பொருட்கள் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தேசிய தினத்தை முன்னிட்டு சிறப்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், மூன்று இனத்தவர்களையும் சேர்ந்த சுமார் 3,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று மகிழ்ந்தனர்.

பி40 பிரிவைச் சேர்ந்த வியாபாரிகளுக்காக வியாபார வாய்ப்புகள் வழங்கப்பட்டதால், 50-க்கும் மேற்பட்ட வியாபார கூடாரங்களில் மக்கள் ஆர்வமுடன் வாங்கிக் கொண்டனர். இதன் மூலம் சிறு வியாபாரிகள் பெரும் பொருளாதார பலன்களை அடைந்தனர்.

இந்த தேசிய தினக் கொண்டாட்டத்தை பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சேவை மையம், கிராம நிர்வாகக் கழகம், மற்றும் இளைஞர்களின் நண்பன் இயக்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன.
பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்பன், பினாங்கு கேபிடி இயக்குநர் ஜெகன், பல சமூக அமைப்புகள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மக்கள் மனதை கவர்ந்த சுவாரஸ்ய நிகழ்ச்சிகள்,
தொடக்கப்பள்ளி மாணவர்களின் போரியா போட்டி,
பட்டாசுக் காட்சி,
கக் நாப் டிரம்மர் நிகழ்ச்சி,
இறுதி கரோக்கே ஐடல் போட்டி,
இறுதி கரோக்கே ஜோடி போட்டி,
குழந்தைகள் வண்ணம் தீட்டும் போட்டி,
“கிட்ஸ் ஷோ அல்லது மெர்டேக்கா,
தேசிய தின ஆடை அலங்காரப் போட்டி,
கார் கழக ஒன்று கூடல்,
மோட்டார் சைக்கிள் கழக ஒன்று கூடல்,
கிராப் புட் ஓட்டுனர்கள் ஒன்று கூடல்,
ஜும்பா ஜோம் சிஹத் (உடற்பயிற்சி நிகழ்ச்சி),
மக்கள் விளையாட்டுகள்,
கலைஞர்-வணிகர்கள் பகுதி,
குதிரைவண்டி சவாரி,
சிறிய விளையாட்டு திருவிழா,
விற்பனை & சிறப்பு நிகழ்ச்சிகள்,
தன்னார்வ விற்பனை,
கார் பூத் விற்பனை,
பிரபலமான பொருட்கள் விற்பனை,
வணிகர்களுக்கு கொடிகள் வழங்கும் விழா,
கருப்பொருளுக்கு ஏற்ப வணிகர் போட்டி,
அதிர்ஷ்டப் பரிசு பிடித்தல்,
இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் சுற்று வட்டார மக்களின் பங்கேற்பையும் ஆர்வத்தையும் பெரிதும் ஈர்த்தன.
சிலாங்கூர்
பந்தாய் ஜெராம் கடற்கரைப் பகுதியில் இருக்கும் நகராண்மைக் கழகத்தின் அங்காடிக் கடைகளுக்கான நேர்முகத் தேர்வில் 30 பேர் பங்கேற்பு- புஷ்பா ராஜன் தகவல்
சிலாங்கூர்
வசதி குறைந்த மக்கள் நலத் திட்டத்தில் மாநில அளவில் 50 ஆயிரம் பேருக்கு ரிம. 30 மில்லியன் ஒதுக்கீடு!- டத்தோ ஸ்ரீ அமிருடின் அறிவிப்பு
பகாங்
Kilang besi Gebeng meletup, 4 tercedera
கோலாலம்பூர்
Kedai emas disamun kumpulan bersenjata pistol, barang kemas hampir cecah RM10 juta dilarikan
சிலாங்கூர்
கோல சிலாங்கூர், வாகீசர் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மும்மொழிப் போட்டிகளில் வாகை சூடினர்- தீபன் சுப்ரமணியம் வாழ்த்து
பினாங்கு
அரா குடா, பெனாந்தி ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன் ஆலய இரத ஊர்வலத்தின் பயண விபரங்கள்
மலாக்கா
Pemandu bas ekpres, kekasih atas riba direman bantu siasatan polis