Alaioli
ஒன்றுபட்டு விளையாடுவோம் – ஒற்றுமையை நிலைநிறுத்துவோம்.

கெடா மாநில சூரியவேல் சமூக நலன் மற்றும் கலை கலாச்சார இயக்கம் – மலேசிய தினத்தை முன்னிட்டு கால்பந்து போட்டி


மலேசிய தினத்தை முன்னிட்டு “ஒன்றுபடுவோம், ஒற்றுமையை நிலைநிறுத்துவோம்” என்ற கருப்பொருளின் கீழ், கெடா மாநில சூரியவேல் சமூக நலன் மற்றும் கலை கலாச்சார இயக்கம் நடத்திய கால்பந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது.

இப்போட்டியை அ.லோகநாதன் தலைமையிலான இயக்கம், சுங்கைப்பட்டாணி தாமான் கெம்பாஸ் வீடமைப்புத் திட்டத்தில் உள்ள பாசா 2 மற்றும் பாசா 4ல் அமைந்துள்ள பொது மைதானங்களில் ஏற்பாடு செய்தது.

டாக்டர் சின்னையா நாயுடு சிறப்புரிமையுடன் தொடங்கி நிறைவு செய்தார்

இந்திய சமூக நலனில் தீவிர பங்களிப்பு வழங்கி வரும் சமூக சேவையாளர் மற்றும் தொழிலதிபர் டாக்டர் சின்னையா நாயுடு, இப்போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி நிறைவு செய்து சிறப்பித்தார்.


போட்டி தொடங்குவதற்கு முன், அனைத்து அணிகளும் அணிவகுத்து நின்றனர். அப்போது டாக்டர் சின்னையா நாயுடு, ஒவ்வொரு அணிக்கும் தேசிய கொடியை வழங்கினார். தேசிய கீதம் முழங்கியபோது, போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் ஒருமித்து பாடிய காட்சி, ஒற்றுமையின் அடையாளமாக அமைந்தது.


போட்டி அமைப்பு


இப்போட்டி 16 வயதிற்குக் கீழ் மற்றும் 14 வயதிற்குக் கீழ் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தின.


கெடா மாநில சூரியவேல் இயக்கத்தின் மேஜர் கால்பந்து குழுவிலிருந்து 16 வயதிற்குக் கீழ் 2 அணிகளும், 14 வயதிற்குக் கீழ் 2 அணிகளும் பங்கேற்றன. இதைத் தவிர தாமான் கெம்பாஸ், சங் ஹாரிமாவ், செமராக் ஆகிய அணிகளும் இதில் இடம் பெற்றன.


இறுதி ஆட்டங்கள் – சுவாரஸ்ய தருணங்கள்


16 வயதிற்குக் கீழ் நடைபெற்ற இறுதியில் செமராக் கால்பந்து அணி, மேஜர் அணியை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியனானது.


14 வயதிற்குக் கீழ் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மேஜர் அணி மற்றும் கெம்பாஸ் அணி கடும் போட்டியளித்தன. முறையான நேரமும், கூடுதல் நேரமும் 0–0 என சமநிலையிலேயே முடிந்தது. அதன் பின்னர் 3–3 பேர் வீதம் பினால்டி வழங்கப்பட்டபோதும் அதே நிலை தொடர்ந்தது. இறுதியில் கோல்கீப்பருக்கிடையே நடைபெற்ற பினால்டியில் மேஜர் அணி 1–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியனானது.


சிறப்பு விருதுகள்


சிறந்த விளையாட்டாளர் – பவித்திரன்


கோல் மன்னன் – கீர்த்தன்



இவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.


பரிசளிப்பு விழா


போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தொழிலதிபர் டாக்டர் சின்னையா நாயுடு, அ.லோகநாதன் தலைமையில் கேடயம், பதக்கம் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.

Leave a Comment
Trending News