அறிவையும் கலைகளையும் இறைவன் எனக் கருதி, கல்வி, அறிவு, கலைகள் போன்றவற்றிற்குப் பெருமைச் சேர்க்கும் விழாவாகக் கொண்டாடப்படுவது தான் கலைமகள் விழாவாகும்.
இவ்விழாவினை மாணவர்களிடையே உய்த்துணரும் நோக்கத்தில் தேசிய வகை மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியில் 2025 ஆம் ஆண்டுக்கான கலைமகள் விழா கடந்த செப்டம்பர் 30ஆம் திகதியன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டத்தோ ஶ்ரீ ரா. அருணாசலம் அவர்கள் செயற்கை நுண்ணறிவு திறனை மாணவர்கள் கைவரப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், பல்வேறு போட்டிகளில் வென்று வாகைச் சூடவும் இந்நாளில் ஹோமம் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இவ்விழாவின் சிறப்பு முகாமையராக பள்ளி மேலாளர் வாரியக் குழுத் தலைவர் டத்தோ ஶ்ரீ ரா. அருணாசலம் அவர்களும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு புவனேஷ்வரன் அவர்களும் துணைத் தலைவர் திரு அஷோக் அவர்களும் கலந்து கொண்டனர்.
தலைமையாசிரியர் திரு கார்த்திக் மாரி அவர்களும் டத்தோ ஶ்ரீ அவர்களும் ஹோமத்தில் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை மேலும் சிறப்பித்தனர்.
ஏறக்குறைய 50 மாணவர்கள் கலைமகள் விழாவிற்காக சீர்கள் கொண்டு வந்திருந்தனர்.
மேலும் முன்னாள் மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் 800 பேருக்கு சைவ உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவானது பள்ளி ஆசிரியர் திருமதி அன்னம்மாள் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடத்தப்பட்டது.
மொத்தம் 700 மாணவர்களும் 50 ஆசிரியர்களும்
விழாவில் பங்கேற்றனர். இவ்விழாவில் மாணவர்களும்
ஆசிரியர்களும்
திருமுறைப் பாராயணம் செய்தனர்.
விழாவில் மாணவர்கள் தெய்வ அவதாரங்களாக அழகிய வேடமணிந்து வந்தனர். ஆண்டு 1 மாணவி ஹரித்ரா ஶ்ரீராம் அவர்கள் மஹாலட்சுமி வேடமணிந்து கலந்து கொண்டார். அதேபோல் ஆண்டு 1 மாணவி கீர்த்தனா சரவணகுமரன் மஹாலட்சுமி உருவமாக அரங்கேறினார். ஆண்டு 3 மாணவி தஷ்விகா ஶ்ரீ சுப்ரமணியம் சரஸ்வதி வேடத்தில் மாணவர்களின் பார்வையை ஈர்த்தார். ஆண்டு 3 மாணவி ரக்ஷ்விகா துரைபாண்டியன் துர்கா தேவியின் அவதாரமாக வந்து விழாவை மேலும் சிறப்பித்தார். இவர்களுக்கு ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
விழாவின் நிறைவாக தலைமையாசிரியர் அனைத்து ஆசிரியர்களுக்கும் காலாஞ்சி வழங்கினார்.