Alaioli
 பினாங்கு மாநிலத்தின் சுங்கை அரா தமிழ்ப்பள்ளியில் தாய்மொழி தினம் அனுசரிப்பு!

பினாங்கு மார்ச் 6 உலகத் தாய்மொழி தினம் தொடர்பில் பினாங்கு மாநிலத்தின் சுங்கை அரா தமிழ்ப்பள்ளியில் தமிழ்மொழியின் உன்னத மாண்பினை பற்று நயத்தோடு எடுத்துரைக்கும் மாணவர் திறன் நிகழ்ச்சி, இப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அண்மையில் சிறப்புற நடத்தப்பட்டது.


சுங்கை ஆரா தமிழ்ப்பள்ளியில் உலக தாய்மொழி தினம் மிகச் சிறப்பாகவும், உற்சாகமாகவும்கொண்டாடப்பட்டது. இதில் ஓர் அங்கமாக மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பின்னர், இப்பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக் கொணரும் தாய்மொழித் துதி அதன் மாண்பு தொடர்பான விளக்கவுரையும், சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டது.


உலகெங்கிலும் வியாபித்திருக்கும் தமிழ்மொழியின் மேன்மை மற்றும் அதன் வியத்தகுக் கூறுகள் குறித்து இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கு.பத்மாவதி விளக்கமளித்த பின்னர், அவ்வாறே மாணவர்களின் படைப்பாற்றல் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து நடைபெற்றன. மாணவர்கள் கவிதை ஒப்புதல், காணாளி படைப்பு, மற்றும் பாடல்கள் வாயிலாகவும் தமிழின் பெருமையையும் இனிமையையும் டுத்துரைத்தனர்.


பள்ளித் தலைமையாசிரியை பத்மலோசினி தனதுரையில் உலகத் தாய்மொழியின் முக்கியத்துவம், அவரவர்க்கு ஏற்ற வகையில் அந்தந்த நாடுகளில் அனுசரிக்கப்படுவது வழக்கமென்றிருக்கும் நிலையில், உலகத்திற்கே மூத்த மொழியான தமிழ்மொழியை நாம் அனைவரும் கண்ணெனப் போறுதல் வேண்டுமென கேட்டுக் கொண்டார்.


தமிழ்மொழியின் பாரம்பரியச் சிறப்புகளையும் அதன் நற்கூறுகளையும் பாதுகாப்பதோடு, அவற்றின் புகழினை பிறரறிய பறைசாற்றுவதும் அவசியமென்று  வலியுறுத்திய அவர், மாணவர்கள்  தாய்மொழியாம் தமிழை மதித்து, போற்றுவதும் வாழ்க்கையோடு அதனை பிணைத்துக் கொள்வதும் சிறப்புமிக்கதென்று அறிவுறுத்தினார்.


Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News