Alaioli
வீடே குப்பைக் கூளமாக மாறியுள்ள தனித்து வாழும் பெண்ணின் இல்லம்; அருள் நேசன் நடவடிக்கை.

எஸ்.எஸ்.மணிமாறன்.

கோலக் கிள்ளான். மார்ச் 6.  இங்கு, தாமான் செலாட் செலாத்தான் மக்கள் குடியிருப்புப் பகுதியில், ஒரு வீட்டில் வெளியிலும் பின் புறத்திலும் குப்பைக் கூளங்கள் நிறைந்து மோசமான தோற்றத்தை உருவாக்கியுள்ள நிலையில், அண்டை அயலார் வழங்கிய புகாரைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் விரைந்து சோதனையிட்ட கிள்ளான் அரச மாநகர் மன்ற உறுப்பினர் அருள் நேசன் ஜெயபாலன்.


ஆரோக்கியம் குறைவு காரணமாக தனித்து வாழும் பெண்மணி நலிவுற்று  இருந்ததை  அறிந்து வீடு முழுவதும் குப்பைகள் குவிந்து கிடந்த இடத்தை தூய்மைப்படுத்தி குப்பைகளை அப்புறப் படுத்தும் நடவடிக்கையில் இறங்கினார். கே டி இபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவன குத்தகைப் பணியாளர்களை அழைத்து வந்து குவிந்து கிடந்த குப்பைகளை விரைவாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.


நோயின் காரணமாக உடல் நலம் குன்றிய தனித்து வாழும் பெண்மணியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியிலும் தாம் இறங்கி செயல் பட்டதாக அருள் நேசன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார். இங்கு, தனித்து வாழும் பெண்மணிக்கு இவ்வட்டாரத்தில் யாரும் உதவிட முன் வராததால், மனித நேய அடிப்படையில் கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் சார்பில் தாம்  இந்த உதவியை முன்னெடுத்து செயல்பட்டதாக அருள் நேசன் அலை ஒளியிடம் கூறினார்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News