Alaioli
மேரு காவல் நிலையத்தில் கைகலப்பில் ஈடுபட்ட 2 கும்பல்கள் மேல் விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்து வரப் பட்டனர்

 எஸ்.எஸ்.மணிமாறன்

கிள்ளான் மார்ச் 6  சில தினங்களுக்கு முன்பு, மேரு காவல் நிலையத்தில் இரவு வேளையில் புகார் செய்ய வந்திருந்த ஒரு கும்பலைப் பின் தொடர்ந்து வந்த மற்றொரு கும்பல் மோதியதில் இரு கும்பல்களுக்குமிடையே கை கலப்பு வலுத்தது. எனினும், காவல் துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் கலவரம் நிறுத்தப் பட்டு மொத்தம் எட்டு பேர் தொடர் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.


இதற்கிடையே, இன்று காலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த எண்மரும் கிள்ளான் நீதிமன்றத்திற்கு காவல் துறையினர் பாதுகாப்புடன் அழைத்து வரப் பட்டனர் என்று வட கிள்ளான் போலீஸ் படைத் தலைவர் சூப்ரிண்டன் எஸ்.விஜய ராவ் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.  இந்த விசாரணை, குடும்பத்தகராறு, கருத்து வேறுபாடு மற்றும் பழைய பகைமை ஆகியவற்றில் தொடர்புடையதாக இருப்பதால், இதன் விசாரணை மேலும் நீட்டிக்கப்படக் கூடும் என்பதால் இதன் முழு விவரங்கள் பின்னர் செய்தியாளர்களிடம் விரிவாக வழங்கப்படும் என்று அவர் அலை ஒளியிடம் கூறினார்.

Post Image

Leave a Comment
Trending News