Alaioli
பினாங்கு மார்ச் 6 பினாங்கு மாநிலத்தின் தென்மேற்கு மாவட்டத்திலுள்ள பாயான் பாரு ரமலான் உணவுச் சந்தைக்கு மாநிலமாநகர் மன்ற மேயர் டத்தோ அ.ராஜேந்திரன் நேற்று மாலையில் மேற்கொண்டிருந்த நட்பு ரீதியான நடைப்பயணத்தின் போது இங்கு தொடங்கப்பட்டிருக்கும் பயன்படுத்திய சமையல் எண்ணெய் சேகரிப்பு திட்டம் தொடர்பில், மதிப்பாய்வு மேற்கொண்டு வணிகர்களுடன் அளவளாவி மகிழ்ந்தார்.
பெட்ரோனாஸ் வணிக நிறுவனப் பிரதிநிதிகளுடனும் இங்கிருக்கும் பிரபல மசூதி நிர்வாகத்தினருடனும் மேயர் நடத்திய மதிப்பாய்வு அமர்வில்,மாநகர் மன்ற உறுப்பினர்கள், அதன் பற்பல துணைத் தலைவர்கள் மற்றும் உயர்தர அதிகாரிகளும் பலரும் உடனிந்திருந்த நிலையில், பினாங்கு மாநகர் மன்றத்திற்கும் பெட்ரோனாஸ் வணிக நிறுவனத்திற்கும் இடையேயான மூலோபாய ஒத்துழைப்பு, இத்திட்டத்தின் முயற்சியை மேலும் மெருகேற்றியது.
பயன்படுத்திய சமையல் எண்ணெய் சேகரிப்பு திட்டத்தை மென்மேலும் ஊக்குவிக்கும் வகையில் அன்றையதினம், 30 ரிங்கிட் மதிப்புடைய பற்றுச் சிட்டைகளுடன் மேலங்கிகளும் உடன் வழங்கப்பட்டது. இந்த நட்புமுறை பயணத்தின்போது, மாநில சமூகப்பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதிகளும் உடன் வருகையளித்திருந்தனர்.
வணிக நடவடிக்கைகளை ஆற்றுவதில் சுயத்தொழில் பாதுகாப்பு திட்டத்தின் பங்களிப்பு தொடர்பான அனுகூல அம்சங்கள் குறித்த விளக்கவுரைகள் மற்றும் அறிவிப்புகளை இவ்வமைப்பின் அதிகாரிகள் இங்குள்ள வணிகர்கள் மத்தியில் எடுத்துரைத்து, வேண்டியத் தகவல்களையும் வழங்கி உதவினர்.
பயன்படுத்திய சமையல் எண்ணெய் சேகரிப்பு திட்டம் என்பது சுற்றுச்சூழல் நலனைப் பேணுவதற்கு வகை செய்யும் அதே வேளையில், பொருளீட்டுவதற்கும் ஓர் உபாயமாக துணை நிற்பதை பலரும் அறிந்திருக்கும் பட்சத்தில், இதனை விரிவுப்படுத்துவதற்கா கூடுதல் நடவடிக்கைகளிலும் வழி முறைகளிலும் மாநகர் மன்றம் மேலும் ஈடுபாடு கொள்ளுமென்ற படிப்பினைப் பாடமும் சமூகத்தினர் தரப்பில் உணர்த்தப்படுமென்று, மாநகர் மன்றத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவின் நிபுணத்துவ அதிகாரி சேவியர் செபஸ்தியன் தெரிவித்தார்.
பினாங்கு
பினாங்கு பாயான் பாரு சந்தையில் பயன்படுத்திய சமையல் எண்ணெய் சேகரிப்பு திட்டம் தொடர்பில் மேயரின் மேலோட்டப் பார்வை!
கிள்ளான்
வீடே குப்பைக் கூளமாக மாறியுள்ள தனித்து வாழும் பெண்ணின் இல்லம்; அருள் நேசன் நடவடிக்கை.
பினாங்கு
Penang Hindu Endowments Board Must Move Beyond Police Reports Amidst Temple Threats
கிள்ளான்
மேரு காவல் நிலையத்தில் கைகலப்பில் ஈடுபட்ட 2 கும்பல்கள் மேல் விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்து வரப் பட்டனர்
கோலசிலாங்கூர்
நோன்பு நோற்போருக்கு ரமலான் மாதத்தில் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு; தீபன் சுப்ரமணியம் தகவல்.
கோலசிலாங்கூர்
ஜெராம் வட்டாரத்தில் அனுமதியின்றி செயல்பட்ட தொழிற்சாலைக்கு சீல் வைப்பு.
தெலுக் இந்தான்
புக்கிட் மெர்தாஜம் (மருத்துவமனை வளாகம்) ஆலயம் சட்ட ரீதியாக கட்டப்பட்டது : ஜசெக (DAP) தேசிய இளைஞர் தலைவர் வூ காஹ் லியோங் திட்டவட்டம்..!
பினாங்கு
பினாங்கு மாநிலத்தின் சுங்கை அரா தமிழ்ப்பள்ளியில் தாய்மொழி தினம் அனுசரிப்பு!