Alaioli
நோன்பு நோற்போருக்கு ரமலான் மாதத்தில் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு; தீபன் சுப்ரமணியம் தகவல்.

எஸ்.எஸ்.மணிமாறன்.

கோல சிலாங்கூர் மார்ச் 6.  நோன்பு நோற்போருக்கு ரமலான் மாதத்தில் புக்கிட் மெலாவத்தி சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தின் வாயிலாக 200 க்கும் மேற்பட்ட வர்களுக்கு பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பாக வழங்கி ஹரிராயா நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டதாக அதன் ஒருங்கிணைப்பாளர் தீபன் சுப்ரமணியம் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


இங்கு, தாமான் படுக்கா மக்கள் குடியிருப்புப் பகுதியில் வசிப்போர் இந்த அன்பளிப்பை நேரில் வந்து பெற்றுக் கொண்டதாக அவர் கூறினார். குடியிருப்பாளர்கள் சங்கத் தலைவர் நிக் இந்த நிகழ்ச்சியை நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்ததாக தீபன் அலை ஒளியிடம் தெரிவித்தார். அதே வேளையில், கிளினிக் மெடி ஏசானில் நடைபெற்ற மருத்துவப் பரிசோதனையில்,  குடியிருப்பாளர்கள்  பங்கேற்றதாக அவர் கூறினார்.



Post ImagePost Image

Leave a Comment
Trending News