Alaioli
புக்கிட் மெர்தாஜம் (மருத்துவமனை வளாகம்) ஆலயம் சட்ட ரீதியாக கட்டப்பட்டது : ஜசெக (DAP) தேசிய இளைஞர் தலைவர் வூ காஹ் லியோங் திட்டவட்டம்..!

டிகே.மூர்த்தி,

தெலுக் இந்தான், மார்ச் 6-பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த புக்கிட் மெர்தாஜம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அன்றைய மருத்துவமனை இந்திய பணியாளர்களால் கடந்த 1899 ஆம் ஆண்டில் சிறிய அளவில் தோற்றுவிக்கப்பட்ட  ஸ்ரீ ஜடா முனீஸ்வரர் ஆலயமாகும்.  அந்த ஆலயத்தை கடந்த 1912 ஆண்டு முதல் நோயாளி ஒருவரால் தினசரி வழிபாடு செய்துள்ளார். அதன்பிறகு கடந்த 1936 ஆம் ஆண்டு முதல் ரெங்கசாமி என்பவர்  ஆலயத்தை பராமரித்து வந்துள்ளார். 


அவர் அப்போது மருத்துவமனை நோயாளிகளுக்கு ( KETUA ATENDAN-HOSPITAL BUKIT MERTAJAM) உதவிப் பணியாளர்களுக்கு ரெங்கசாமி என்பவர் தலைமை ஏற்றுள்ளார்.  அவர் கடந்த 1969 ஆண்டில் பணிவோய்வு பெற்றுள்ளார் என்றும் மக்களுக்கு ஆபத்து நேரா வண்ணம் கோயிலைப் புதுபிக்கும்படி (MPSP) பினாங்கு ஊராட்சி மன்றம் கடந்த 05.09.1998 ல், சட்ட ரீதியாக ஆலய நிர்வாகத்திடம் எழுத்துப் பூர்வமான கடிதம் வழங்கியுள்ளது. அதன்படி ஆலய நிர்வாகம் கோயிலை புதுப்பித்துள்ளது என்ற வரலாறு கூறுகிறது. 


தற்போது அந்த கோயில் குறித்த ஒரு சிறு கும்பல் நாளை (07-03-2026) சனிக்கிழமை எதிர்ப்பு அணியினர்,  சட்டவிரோதமாக மருத்துவமனை முன்னால் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதை குறித்த ஜசெக தேசிய இளைஞர் பகுதித் தலைவரும், தெலுக் இந்தான் பாசீர் பெர்டாமார் சட்டமன்ற உறுப்பினருமான வூ காஹ் லியோங் “அலை ஒளி” செய்தியாசிரியர் உள்ளிட்ட பத்திரிகை சந்திப்பு கூட்டத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை கோயில் குறித்த எதிர்ப்பு கூட்டம் நாளை அந்த வளாகத்தில் நடத்தப்படலாம்.  வேலைவெட்டி இல்லாத குறு சிறு கூட்டத்தினரின் இந்தச் செய்தி சமூக ஊடகத்தின் மூலம் தெரியவந்துள்ளது என்றார் அவர். 


மலேசிய இஸ்லாம் மதம் அதிகாரத்துவ மதமாக அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. அதே வேளையில், மற்ற இந்து, கிறிஸ்துவம். புத்தம் போன்ற சமயங்களுக்கும் சட்டம் அனுமதி அளிக்கிறது. நாட்டில் மத மற்றும் சமூக நல்லிணக்கம் பேணிகாத்து வரப்படுகிறது.  அதனால், ஒற்றுமை மேலோங்கிடவும், பொருளாதார வளர்ச்சி மிளிரவும் செய்வதை நாம் அனைவரும் பார்க்கின்றோம். 


இந்த வளர்ச்சியோடு மதம் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு தீ மூட்டிவிடும் தோரணையில் ஆலய விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளவர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றம் செல்வதற்கும். அதே வேளையில் தேசிய துணை வழக்கறிஞர் சட்ட ரீதியாக அனுமதி அளித்ததால் தான் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனைப் பெறுவார்கள். அதுவே அவர்களுக்குத்  தக்க பாடமாகவும் இருக்கும் என்றார் ஒரு வழக்கறிஞருமான வூ காஹ் லியோங்.    


அந்நிலையில், நாளை நடைபெறும் எனக் கூறும் அந்த ஆர்ப்பாட்டம் என்பது சட்டத்திற்கு எதிரான  கூட்டமாகும் என்பதால் மாவட்டப் போலீசார் கைது செய்து அவர்களை தேசிய துணை வழக்கறிஞர் மூலம் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையெனில், ஆலய விவகாரத்தில் வழிப்போக்கர்களின்  தலையீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. மலேசியா பல்லின மதங்களுடன் நல்லிணக்கத்துடன் கூடி வாழும் ஒரு குடும்பம். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் ஆலய விவகாரத்தை, விகாரமாகவே ஆக்குவதற்கு கோயில்கள் மீது ஆர்வம் கொண்டுள்ளனர் என்றார் அவர். 


நாட்டின் பிரதமரும், பக்காத்தான் ஹராப்பான் தலைவரும், தம்புன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் முதல் எல்லோருமே அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு ஏற்றபடி கூட்டரசு மற்றும் மாநில அரசாங்கத்தை உறுதியிலும் உறுதியுடன் முன்னெடுத்து வருவதைப் பார்க்கிறோம். எல்லாப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு. தீர்க்கப்படாத  பிரச்சினை என்பது கிடையாது என்றும் பேரா ஆட்சிக்குழு உறுப்பினருமான வூ காஹ் லியோங் செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார்.

Post Image

Leave a Comment
Trending News