Alaioli
ஜெராம் வட்டாரத்தில் அனுமதியின்றி செயல்பட்ட தொழிற்சாலைக்கு சீல் வைப்பு.

எஸ்.எஸ்.மணிமாறன்.

கோல சிலாங்கூர் மார்ச் 6.  இங்கு, கோல சிலாங்கூர் மாவட்டத்தில் ஜெராம் வட்டாரத்தில் 50 பேர் கொண்ட அமலாக்கப் பிரிவினர் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போது,  அனுமதியின்றி செயல்பட்ட தொழிற்சாலை சீல் வைத்து மூடப்பட்ட தோடு, தொழிற்சாலையில் சில முக்கிய பொருட்களும் மேல் விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டதாக கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரி லோக்மான் சாலே தகவல் தெரிவித்தார். 


நேற்று காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை மேற்கொண்ட அதிரடி பரிசோதனையில், ஸ்பான், கோல சிலாங்கூர் மாவட்ட நில இலாகா, ஆயர் சிலாங்கூர், தெனகா நேசனல் ஆகிய முக்கிய இலாகா அதிகாரிகளும் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து செயல்படுத்தியதாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். 


2007 ஆம் ஆண்டின் நகராண்மைக் கழகச் சட்டத்தின் கீழ் அனுமதியின்றி மின் வடங்கள் உற்பத்தித் தயாரிப்பில் ஈடுபட்டு வந்ததாக அறியப் பட்ட நிலையில், இதில் தொடர்புடைய அனைவருக்கும் எச்சரிக்கைக் கடிதங்கள் வழங்கப்பட்டதோடு, விரைவில் விசாரணைக்கு அழைக்கப்பட்டு குற்றம் நிரூபணமானால் பொருத்தமான தண்டனை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று லோக்மான் அலை ஒளியிடம் தெரிவித்தார்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News