Alaioli
சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் பந்திங்கில் சித்திரைப் புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம்= பாப்பா ராய்டு தகவல்.

எஸ்.எஸ்.மணிமாறன்

ஷா ஆலம் ஏப்ரல் 30.  சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில், மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியின் நல்லாசியுடன் பந்திங் நகரை யொட்டி எழுந்தருளியுள்ள  நூறாண்டுகள் பழைமையான தாமான் செரி புத்ரா அருள் மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் கலாசார மண்டபத்தில் நாளை 1.5.2026  அரசு விடுமுறை நாளான , மே தினத்தன்று மாலை 7 மணி தொடக்கம் சித்திரைப் புத்தாண்டு கலை விழா கொண்டாட்டம் சைவ உணவு உபசரிப்புடன், கண்ணுக்கு விருந்தாக ஆடல் பாடல் பரிசளிப்பு என பண்பாடு பாரம்பரியப் படைப்புகளுடன் பல் வேறு அங்கங்கள் இவ்விழாவில் இடம் பெறும் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


ஆலயத் தலைவர் கே.குமார் நிர்வாகத்தினரின் கூட்டுப் பணி நடவடிக்கையில் விழா கொண்டாட்டம் சிறப்பாக நடந்தேறும் என்று பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு அலை ஒளியிடம் கூறினார். அழைக்கப் பிரமுகர்கள் பொது மக்கள் மத்தியில் சித்திரைப் புத்தாண்டு கலை விழா நேர்த்தியாக வழி நடத்திச் செல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Comment
Trending News