Alaioli
பத்தாங் பெர்சுந்தை மேரி தோட்டத்தில் சித்திராப் பௌர்ணமி திருவிழா..!

டிகே.மூர்த்தி

கோல சிலாங்கூர், ஏப்ரல் 30- நாளை 01.05.2026 வெள்ளிக்கிழமை காலையில் இங்குள்ள மேரி தனியார் தோட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு மகா மாரியம்மனுக்கு சித்திராப் பௌர்ணமி திருவிழா வெகு விமரிசையுடன் தோட்டத் தொழிலாளர்களால் கொண்டாடப்படுகிறது.


இத்திருவிழாவில், உள்ளூர் மக்களும் முன்னாள் பாட்டாளி மக்களும் அவர்களின் இன்றைய தலைமுறையினர் என்ற நிலையில் சுமார் 600 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் முன்னாள் தோட்டப் பாட்டாளியும், இந்நாள் நாடறிந்த எழுத்தாளருமான யசோதா “அலை ஒளி” சமூக ஊடகத்திடம் தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து கூறுகையில், ஆங்கிலேயர் ஆட்சியில் அமைக்கப்பட்ட இத்திருத்  தலத்தில் கொண்டாடப்படும்  சித்திராப் பௌர்ணமி திருவிழா குறித்த பிரசுரிக்கும் “அலை ஒளி” ஊடகத்திற்கு முதலில் ஆலய சார்பில் நன்றியினைப் பதிவு செய்கிறேன். மீண்டும் கோயில் திருவிழா குறித்த என் அனுபவத்தைத் தொடர்கிறேன்.


ஒரு கால கட்டத்தில், தோட்டத் திருவிழாவுக்கு ஒரு மாதம் முன்பே மக்கள் மத்தியில் உற்சாகம் களைகட்டத் தொடங்கும். கொடி ஏற்றத்துடன் ஆரம்பிக்கப்படும் திருவிழா அன்று காலையில் பால் குடம், காவடி, அன்னதானம், இரவு மகா மாரியம்மனுக்கு அலங்காரம் செய்து இரத ஊர்வலத்தில் எழுந்தருளியுள்ள நிலையில், மேரி தோட்ட மக்களுக்கு அருள் பாலிக்கிறார். 


திருவிழா இறுதி நாளன்று சாதி, மத வேறுபாடின்றி தோட்ட மக்கள் அனைவரும் கோயில் திருவிழாவில் பங்கேற்பதுடன், ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீர் ஊற்றி மகிழ்ந்த அந்த நாள் மீண்டும் திரும்புமா என்ற உள்ளத்து ஏக்கம் தான் மனதை தொடுகிறது என்றார் யசோதா.- Alaiolinews

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News