Alaioli
சுற்றுலா பயணிகளைக் கவரும் பாரம்பரிய பண்பாட்டு கலை விழா ஜூலை மாதம் நடைபெறும்  வோங் ஹேன் வாய் தகவல்

ஜூன் 11-பினாங்கு தீவிற்கு வரும் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திலுக்கும் வகையிலும் பல்லின பொதுமக்கள் இடையே பாரம்பரிய பண்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் ஜூலை மாதம் ஏழாம நாள.  முதல் 9ஆம் நாள்  வரை மூன்று நாட்களுக்கு உலக ஜோர்ஜ்டவுன் பாரம்பரிய பண்பாட்டு நிகழ்ச்சிகள் கொண்டாட்டம் நடைபெறும். நமது கலை பண்பாட்டு பாரம்பரியத்தை தொடர்ந்து காத்து வரும் கடமையும் பொறுப்புணர்வும் நமக்கு உள்ளது என பினாங்கு மாநில சுற்றுலாத்துறை ஆட்சி குழு உறுப்பினர் வோங் ஹூன்  வாய் செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் கூறினார். 


2009-ஆம் ஆண்டு முதல் பினாங்கு ஜோர்ஜ்டவுனில் இந்த விழா ஆண்டுதோறும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டும் 17 வது ஆண்டாக இந்த உலக பாரம்பரிய பண்பாட்டு கலை விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பாரம்பரிய கொண்டாட்ட விழா மேம்பாடும் வளர்ச்சியும் கண்டு வந்துள்ளது. இப்போது 35 சமூக குழுக்கள் இந்த கொண்டாட்டத்தில் இணைந்துள்ளதது பெருமையாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் ஜோர்ஜ்டவுன் உலக பாரம்பரிய கலை பண்பாட்டுக் குழுவினரை மனதார  பாராட்டுவதாக அவர்  மேலும் கூறினார். 

ஜூலை மாதம் பினாங்கு தீவிற்கு ஒரு சிறப்பான மாதமாக உள்ளது. இம்மாதத்தில்தான் பல்வகையான பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படுகின்றன. இம்மாதத்தில் தான் பினாங்கு ஆளுநரின் பிறந்தநாள் விழா கொண்டாடப் படுகிறது. இந்த நாள் ஒரு பொது விடுமுறை நாளாகும். இதை அடுத்து புக்கிட் மெர்தாஜாமில் புனித அன்னம்மாள் திருவிழா,  சிங்க, லாயன்ஸ் நடனம.   ஆகிய முக்கிய நிகழ்ச்சிகள் கொண்டாடப்படுகின்றன. 

நமது நாட்டில் குறிப்பாக பினாங்கு தீவின் பண்பாட்டு கலை போன்ற பாரம்பரிய கூறுகளை அறிந்து  அனுபவிக்க,  உள்நாட்டு பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இந்த விழா உதவும். இந்தக் கொண்டாட்டத்தில் ஜோர்ஜ் டவுனில் சுற்றியுள்ள பல்வேறு பாரம்பரிய குழுக்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளது சிறப்புமிக்கது. மேலும் இங்குள்ள யுனெஸ்கோ பாரம்பரிய கட்டிடங்களைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியும் இருக்கும் என அவர் கூறினார்.
\"கதவுகளும் கதவுக்கான வழிகளும்\" என்ற கருப்பொருளில் ஜோர்ஜ்டவுன் உலக பாரம்பரிய பண்பாட்டு கலை விழா கொண்டாடப்பட உள்ளது. மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த கொண்டாட்டத்தில் சமூக கருத்தரங்குகள், ஒன்று கூடும் குடும்ப பாரம்பரிய நடைப்பயணம், எட்டு யுனெஸ்கோ பாரம்பரிய கட்டிடங்கள் திறப்பு விழாவும் இடம் பெற உள்ளது என உலக பாரம்பரிய ஜோர்ஜ்  டவுன் நிர்வாக இயக்குனர் டாக்டர் அங் மின் சீ தமது வரவேற்புரை கூறினார். 

உலக பாரம்பரிய ஜோர்ஜ் டவுன் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகளை மூன்று நாட்கள் எங்களோடு இணைந்து நடத்துவதற்கு, இந்த வட்டாரத்தை சுற்றியுள்ள 35 பொது நிறுவனங்களும் அமைப்புகளும் இயக்கங்களும் முன்வந்துள்ளன. அவர்கள் தங்கள் பாரம்பரிய கலை பண்பாட்டை பல்வேறு நிகழ்ச்சிகள் வழியாக இந்த நாட்களில் வெளிப்படுத்துவார்கள் என அவர் மேலும் கூறினார். 

உலக ஜோர்ஜ் டவுன் பாரம்பரிய விழா கொண்டாட்டத்தில் நாங்களும் கலந்து கொள்கிறோம். ஜூலை மாதம் 7-ஆம் தேதியில் முஸ்லிம்களின் பாரம்பரிய உணவு வகைகள் பொதுமக்கள் சுவைக்க  வைக்கப்படும் என  கஃபீம் இயக்கத்தின் தலைவர் ஹஜி ஹமீத் சுல்தான் ஜஃபர் உடன் தெரிவித்தார்.

Leave a Comment
Trending News