Alaioli
கங்கார் பூலாய் கோயில் விவகாரம் -  கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்!! சந்திர சேகரன் கோரிக்கை!!

கூலாய்,டிச27: கடந்த 15ஆம் தேதி கூலாய் ஊராட்சி கழகத்தால் இடிக்கப்பட்ட கங்கார் பூலாய் மலையாளும் முருகன் கோயில் நிர்வாகத்தினரை நேரில் சந்தித்து,நடப்பு நிலவரங்களை கேட்டறிந்த கூலாய் நாடாளுமன்ற உறுப்பினரின் செயல்பாட்டை தாம் வரவேற்பதாக கூறிய  பெரிக்கத்தான் நேஷனல் கட்சியின் மலாய்காரர் அல்லாத பிரிவின் தலைவர் திரு. சந்திர சேகரன் ஆறுமுகம் இந்தியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கும் இச்சிக்கலுக்கு நிறைவான தீர்வையும் அவர் ஏற்படுத்த் வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.


மேலும், அக்கோயில் நிர்வாகத்தின் நோக்கம் மற்றும் அவர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களையுன் புரிந்து கொண்டு, அவர்களின் நியாயமான கோரிக்கையான அக்கோயிலை அதே இடத்தில் நிலை நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் துணை நிறக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதுமட்டுமின்றி,ஜொகூர் மாநில ஜசெக தலைவரும், தகவல் தொடர்பு துணை அமைச்சருமான திருமதி. தியோ நீ செங்குன் அவர் சார்ந்த அரசியல் கட்சியும் ஆலய நிர்வாகம் தற்போது எதிர்கொண்டு வரும் உண்மை நிலவரங்களை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.


மேலும், இந்த விவகாரத்தில் தியோ நீ செங் அவர்கள் உறுதியான நிலைப்பாட்டுடன் இருந்து, அந்த கோயிலை அதே வளாகத்தில் மீண்டும் நிலைநிறுத்துவது அவரின் தார்மிகப் பொறுப்பு என்பதை இங்கே நினைவூட்டுவதாகவும் சந்திரசேகரன் சுட்டிக்காட்டினார்.


அத்துடன், வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்களில் இன உணர்வுகள், மரியாதை மற்றும் விவேகத்துடன் செயல்பட வேண்டிய அவசியத்தை தியோ நீ செங் வலியுறுத்தியிருப்பதை நினைவுபடுத்திய சந்திரசேகரன் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி, தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தி, அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து கோயிலை மீண்டும் கட்டி எழுப்பப்பட வேண்டும் என  ஜொகூர் மாநில பெரிக்கத்தான் நேஷனல் கட்சியின் மலாய்காரர் அல்லாத பிரிவின் உச்சமன்ற உறுப்பினருமான சந்திர சேகரன் ஆறுமுகம் கேட்டு கொண்டார்.

Leave a Comment
Trending News