Alaioli
கிள்ளான் அரச நகர வளர்ச்சிக்கு பண்டாராயா உறுப்பினர்கள் ஆற்றி வரும் சேவை அளப்பரியது.

எஸ்.எஸ்.மணிமாறன்

கிள்ளான் டிச.27. கிள்ளான் அரச நகர வளர்ச்சிக்கு நியமிக்கப்பட்டிருந்த பண்டாராயா உறுப்பினர்கள் ஆற்றி வரும் சேவை அளப்பரியது என்று டத்தோ பண்டார், டத்தோ அப்துல் ஹமீட் ஹூசேன் புகழாரம் சூட்டினார்.   நேற்று, இங்கு கிள்ளான் பண்டாராயா ராஜா மஹாடி சிறப்பு கூட்ட அறையில் ஆண்டின் இறுதி நிகழ்ச்சியாக, 12/25 இன் மாதாந்திரக் கூட்டத்தை வழி நடத்திய அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார். 


கிள்ளான் நகரை ஒட்டிச் செல்லும் எம் ஆர்டி இரயில் சேவை புத்தாண்டில் தொடங்கப் படலாம் என்ற அறிவுப்புகள் கிடைக்கப் பெற்ற நிலையில், அதில் பயணம் செய்ய விருப்போரின் வாகனங்கள் ஓரிடத்தில் முறையாக நிறுத்தி வைக்கப்படுவதற்கு ஏற்ற இடம் அமைய பெறும் வேளையில் அதைக் கண்காணிப்பதற்கு கூடுதல் வாகனக் கண்காணிப்பாளர்கள் அடுத்த ஆண்டில் தெரிவு செய்யப்படுவர் என்று டத்தோ பண்டார் கூறினார்.


வளர்ச்சியை நோக்கி ப் பயணித்துக் கொண்டிருக்கும் கிள்ளான் அரச நகர வட்டாரத்தில் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டிருக்கும் குப்பைகள் பிரச்சினைகளைக் களைய அதற்கான தேவையான அதிகாரிகளும் நியமிக்கப்படுவர் என்று கூட்டத்தை நிறைவு செய்த அவர் மேற்கண்ட தகவலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.


மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் வேண்டுகோளை ஏற்று, கிள்ளான் அரச நகரம் தூய்மையான நகராக மாற்றி அமைப்பதற்கு பண்டாராயா உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதை இந்த ச் சந்திப்பில் டத்தோ பண்டார் தெரிவித்தார்.  புத்தாண்டில் பண்டாராயா உறுப்பினராக தாம் நியமனம் பெற விருப்பதால், தமக்கு வழங்கப்பட விருக்கும் பணிகளை நிறைவாக செய்து முடிப்பதோடு கிள்ளான் அரச நகர வளர்ச்சிக்கு தமது பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருவேன் என்று ரோய் ஞானேஸ்வரன் சுப்ரமணியம் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News