Alaioli
பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய  ஆண்டு விழாவில் ராம் கர்ப்பால் சிங் தரிசனம்!

பினாங்கு டிசம்பர் 26 பினாங்கு மாநிலத்தின் தண்ணீர்மலை சாலையில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்திர விழாவில், புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் சிறப்புப் பிரமுகராக கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்.


        
சம்பந்தப்பட்ட ஆலயம் மாநிலத்தில் பிரசித்திப் பெற்ற திருத்தலமாக எல்லாக் காலங்களிலும் ஏராளமான பக்தப் பெருமக்களை ஈர்த்து வரும் நிலையில், இவ்வாலய வருடாந்திர விழாதொடர்பில், இதன் நிர்வாகத்தினரால் விடுக்கப்பட்டிருந்த அழைப்பினை ஏற்று, ராம் கர்ப்பால் இங்கு வருகையளித்து சாமி தரிசனம் செய்தார்.


        
சிறப்புப் பிரமுகராக அவரது வருகையை முன்னிட்டு,அவருக்கு தனித்துவச் சிறப்புடன் மரியாதை நடத்தப்பட்டு கௌரவிக்கப்பட்ட வேளையில், அதனை நன்றிப் பெருக்குடன் ஏற்றுக் கொண்ட அவர், இதரப் பக்தர்கள் பலருடன் தானும்இணைந்து சிறப்புப் பூசைகளிலும் கலந்து கொண்டார்.


அன்றைய தினம் ஆலயத்தில் விமரிசையாக நடத்தப்பட்ட சிறப்பு அன்னதான நிகழ்விலும் பங்கெடுத்துக் கொண்டு, பொது மக்கள் பலருடன் உணவருந்திய அவர், பின்னர் நடைபெற்ற சாமி ஊர்வலத்திலும் உடன் பங்கேற்று, தனது பக்தி உணர்வை வெளிப்படுத்தினார்.

Post ImagePost Image

Leave a Comment
Trending News