Alaioli
செமினியில் போதைப் பொருள் தயாரிப்பு/ பதப்படுத்தும் சட்ட விரோத ஆய்வுக் கிடங்கு கண்டுப் பிடிக்கப்பட்டது ; அறுவர் கைது.

எஸ்.எஸ்.மணிமாறன்.

செமினி டிச.27  இங்கு, செமினி வட்டாரத்தில் நீண்ட காலமாக இரகசியமாக செயல்பட்டு வந்ததாக அறியப் படும் போதைப் பொருள் தயாரிப்பு மற்றும் பதப்படுத்தப்படும் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த ஆய்வுக் கிடங்கை முற்றுகையிட்ட சிலாங்கூர் நர்கோட்டிக் போதைப் பொருள் ஒழிப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர், ஆய்வுக் கிடங்கை சுற்றி வளைத்ததோடு அங்கிருந்து தப்பியோட முயன்ற அறுவரை கைது செய்ததோடு, ஆய்வுக் கிடங்கில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்ததாக புக்கிட் அமான் நர்கோட்டிக் பிரிவு போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை இயக்குநர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் தெரிவித்தார். 


பல மாதங்களாக தேடல் நடவடிக்கையின் போது, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்த அறுவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருவதாக பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விவரித்தார். அதே வேளையில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அவர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல் அடிப்படையில் செரி கெம்பாங்கானில் இருக்கும் தாமான் இண்ட்டாஸ்ட்ரி செலிசா ஜெயா மற்றும் கோலாலம்பூர் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் தாமான் பெரிண்டாஸ்ட்ரியான் கெப்போங்கிலும் போதைப் பொருட்கள் பதப்படுத்தும் ஆய்வுக் கிடங்குகளும் கண்டு பிடிக்கப்பட்டுதாக டத்தோ ஹூசேன் கூறினார். காவல் துறையினர் பறி முதல் செய்த கோக்கேய்ன், கெத்தாமின், மற்றும் பவுடர் வடிவிலும் பானங்கள் வடிவிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்களை அவர் செய்தியாளர்களிடம் சுட்டிக் காட்டி ப் பேசினார்.


பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப் பொருட்களின் தற்போதைய  மதிப்பு 1.04 மில்லியன் ரிங் கிட்டாக இருக்கும் என்றும் இந்தப் போதைப் பொருட்கள் 20.7 இலட்சம் பேருக்கு பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் டத்தோ ஹூசேன் தெரிவித்தார். 1952 ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப் பொருள் சட்டம் 39 பி பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் அனைவரும் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்படுவதோடு, குற்றம் நிரூபணமானால் அனைவருக்கும் ஆயுட்காலம்வரை சிறை அல்லது மரணதண்டனை விதிக்கப்படலாம் என்று டத்தோ ஹூசேன் தெரிவித்தார்.


செய்தியாளர்கள் சந்திப்பின்போது, சிலாங்கூர் தலைமை போலீஸ் அதிகாரி டத்தோ பஹ்லாவான் ஷஸேலி டத்தோ கஹார் ,  உதவி இயக்குநர் முகமட் அஃப்ஷானிஷாம் யஹ்யா, நர்கோட்டிக் போதைப் பொருள் பிரிவு உதவி இயக்குநர் ஹைய்ரி ரகம்தான், ஏசிபி ஷாருடின் மன்சோர், காஜாங் போலீஸ் தலைமையகத்தின் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசோப் மற்றும் புக்கிட் அமான் நர்கோட்டிக் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். சிலாங்கூர் மாநில ரீதியில் போதைப் பொருள் விநியோகம், நடமாட்டம் இருப்பது தெரிய வரும் பொது மக்கள், சமூக சேவை அமைப்புகள் 012. 208 7222 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைத் தரலாம். தகவல் அளிக்கும் நபர்களின் விவரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்படும் என்று டத்தோ ஹூசேன் உறுதி அளித்தார்.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News