Alaioli
சித்தியவானில் அன்பு மழையில் நனைந்தார் சிவநேசன்

டிகே.மூர்த்தி

சித்தியவான் 27.12.2025  என் சேவையைக் குறித்து பாராட்டிப் பேசுபவர்களும் உள்ளனர், வெறுத்து பேசுபவர்களும் உள்ளனர். சமுதாய நலம் கருதி அறிக்கை விட்டால், அந்த அறிக்கை மீது உடன்பாடு இல்லாமலும், அதற்கான காரணமே தெரியாமல் எதிர்மறையான அறிக்கைகுக்கு சொந்தக்காரர்களும் இல்லாமல் இல்லை. இது அவர்களுடைய உள்ளார்ந்த குணமாகும் என்பதால் அவர்களோடு அறிக்கைப் போரை நடத்திக் கொண்டிருக்க நேரம் இல்லை. கால நேரத்தை வீணடிக்க தாம் விரும்பவில்லை.


அவர்களுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. அமைதிதான் என்னுடைய சேவையின் பலம் என்றும் பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் அச்சலிங்கம் பேசினார்.  நேற்று 26.12.2025 வெள்ளிக்கிழமை இங்குள்ள ஆஹ ஹிங் உணவகத்தில் சித்தியவான் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய பரிபாலன சபா ஏற்பாட்டில் பேரா சுல்தான் அவர்களின் பிறந்தநாளில் \'டத்தோ\' விருது பெற்ற சிவநேசனுக்கு பாராட்டு விழா நடத்தியுள்ளது. 


இந்த விழாவுக்கு மஞ்சோங் மாவட்ட ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள், அரசு சாரா இயக்கம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி வாரியக் குழு ஒன்றிணைந்து வெகு நேர்த்தியுடன் நடத்திய நிகழ்வில், சிவநேசன் தொடர்ந்து பேசுகையில், சட்டமன்றத்தில் எதிரே அமர்ந்திருக்கும் எதிர்கட்சியினர்  நடப்பு அரசாங்கத்தை எதிர்ப்புதான்  அவர்களின் வெளிப்பாடாகும்.


அது போன்று மாநில இந்திய சமூகத்திற்கு நல்லது செய்யும்போது அதனை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சொல்லும் காரணம் நம்பும்படியாக இருக்காது என்றார் அவர். என் பார்வையில் எப்போதுமே இவர்களை ஒரு பொருட்டாகவே நான் கருதியதே இல்லை. என் சமூகத்திற்கு செய்யவேண்டியவைகளில் வெற்றிப் பெறும்வரை செய்து கொண்டே இருக்கிறேன்.


அந்தச் சேவையின் பாதையிலேயே தான் பயணிக்கிறேன். பக்த காளியம்மன் கோவில் விவகாரம் குறித்து அனைவருக்கும் தெரியும். கடந்த 1947 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டதாக மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ வைத்திலிங்கம் கூறியுள்ளார். அக்கோவில் பிரச்சனை பேராவிலும் விஸ்வரூபம் எடுத்தது. தைப்பிங், பாரிட் புந்தார் மற்றும் தாப்பாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள ஆலயங்களை அகற்றக்கோரி நில அலுவலகம் ககடிதம் வழங்கியது. பிரச்சனை ஆட்சிக்குழு கூட்டத்தில் பேசப்பட்டு மாற்று நிலம் வழங்கவதோடு கோவில் அமைக்க அரசாங்கம் நிதியும் வழங்க முன்வந்துள்ளது.


இதற்கு ஒப்புக்கொண்டவர்கள் பலரும், மறுப்பவர்கள் சிலரும் இருக்கின்றனர். பேராவில் நான் செய்துவரும் சேவையில்  ஆலயங்கள், சமூக அமைப்புகள், தமிழ்ப்பள்ளிகள் உள்ளிட்டவைகளில்,  ஒருவரும் மன நிறைவு இல்லாமல் என்பவர்கள் இல்லை. நான் செய்வது நேர்மறையானது என்று நம்புகிறேன். அதனால், பேரா ஆட்சிக்குழுவில் இருப்பது மகிழ்ச்சி கொள்கிறேன் என்றும் சிவநேசன் விவரித்தார்.   நீங்கள் இல்லாமல் நானில்லை. என்னுடைய முதலாளிகள் நீங்கள் தான். என்ன பிரச்சினையாக இருப்பினும் என் பார்வைக்கு கொண்டுவாருங்கள். நாம் அமர்ந்து பேசுவோம்.


பேராவில் அந்த 47 ஆலய மாற்று நிலப்பிரச்சினை தீரும்வரை இனி புதிய ஆலயம் கட்டவேண்டாம் என்று சொன்னது நான். அதற்கு கோலாலம்பூர் தலைவர் ஒருவர் இனி கோவில் கட்டுவதற்கு ராக்கிட்டில் சென்று வானத்தில் தான் ஆலயம் கட்ட வேண்டுமா? என்று ஒரு தமிழ்ப்பத்திரிக்கையில் முதல் பக்கச் செய்தியாக வெளிப்படுத்தப்பட்டது. புதிய ஆலயம் கட்ட வேண்டாம் என்று நான் சொன்னதில் காரணம் உண்டு என்று மாநில மலேசிய இந்து சங்கம் மற்றும்  இந்து தர்ம மான்றமும் ஒப்புக்கொண்டனர் என்றும்  சிவநேசன் சுட்டினார்.

Post ImagePost ImagePost ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News