Alaioli
பாவித்த ஜீன்ஸ் உடைகளை கைப்பை, புத்தகப்பைகளாக உருவாக்கும் பயிற்சிப்பட்டறை.

எஸ்.எஸ்.மணிமாறன்

கோல சிலாங்கூர் டிச.27. வீட்டில் பயன்படுத்திய ஜீன்ஸ் பேண்ட் உடைகள், பயன்படுத்தாத நிலையில் இருப்பின் அவற்றைக் கொண்டு வந்து, கைப்பைகள், புத்தகப் பைகளாக வடிவமைக்கும் தையல் பயிற்சிப் பட்டறையை தாம் வழி நடத்தியதாக சபாக் பெர்ணம் மாவட்ட மன்ற உறுப்பினர் புஷ்பா ராஜன் தெரிவித்தார்.


கோல சிலாங்கூர் வணித்தா பிரிஹாத்தின் மகளிர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஒரு நாள் பயிற்சிப்பட்டறையில் வட்டார அளவில் அமானா மகளிர் ஆர்வத்துடன் திரளாக வந்து கலந்து கொண்டதாக அவர் கூறினார். கோல சிலாங்கூர் நகராண்மைக்கழக உறுப்பினர் துவான் முகமட் அப்துல் ரஹ்மான் பயிற்சிப் பட்டறையைத் தொடக்கி வைத்து வாழ்த்துரை வழங்கியதோடு, பயிற்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் ஊக்குவிப்புத் தொகையை எடுத்து வழங்கி அவர்களின் சேவையைப் பாராட்டியதாக புஷ்பா ராஜன் அலை ஒளி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


பயன்படுத்த முடியாத நிலையில் வீட்டில் குவிந்து கிடக்கும் ஜூன்ஸ் பேண்ட் உடைகளை, நேர்த்தியாகத் தைப்பதில் தேர்ச்சிப் பெற்ற பெண்மணிகள் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வடிவங்களில் புத்தகப்பை, கைப்பைகளை தைத்துப் பாராட்டைப் பெற்றதாக அவர் கூறினார். கம்போங் சுங்கை சீரே கிராமத் தலைவி புவான் நோர்ஹஸ்லினா அலிம் மேற்பார்வையில் இந்தப் பயிற்சிப்பட்டறை தங்கு தடையின்றி நடைபெற்றதாக புஷ்பா ராஜன் பின்னர் அலை ஒளியிடம் தெரிவித்தார். 


சபாக் பெர்ணம் மாவட்ட மன்ற உறுப்பினராக   மீண்டும் தேர்வு பெற்று அடுத்த ஆண்டில் தமது பணியைத் தொடர விருக்கும் புஷ்பா ராஜன், மாவட்ட மன்ற உறுப்பினர் பதவிக்கு  நியமனம் செய்யப்பட விருப்பதை அறிந்து அலை ஒளி அவருக்கு தமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

Post ImagePost ImagePost Image

Leave a Comment
Trending News